Home /theni /

மதுரை டூ தேனி.. இறுதி கட்ட ரயில் சோதனை ஓட்டம் நிறைவு 

மதுரை டூ தேனி.. இறுதி கட்ட ரயில் சோதனை ஓட்டம் நிறைவு 

Theni

Theni train

Theni District: மதுரை- தேனி இடையே மே 27-ஆம் தேதி விரைவு ரயில் போக்குவரத்து தொடங்க உள்ள நிலையில் அகல ரயில் பாதையில் இறுதி கட்ட சோதனை ஓட்டம் நடைபெற்றது.

    மதுரை-போடி இடையேயான விரைவு ரயில் திட்டத்தில் முதல் கட்டமாக மதுரை -தேனி மார்க்கத்தில் முன்பதிவில்லாத விரைவு ரயில் போக்குவரத்து மே 27-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. தேனி மாவட்ட மக்களின் கனவு திட்டத்தை பிரதமா் நரேந்திரமோடி நாளை (மே 26ம் தேதி) காணொளி காட்சி வாயிலாக தொடக்கி வைக்கிறாா்.

    இந்த நிலையில், புதிய அகல ரயில் பாதையில் பல கட்ட சோதனை ஓட்டம் நடைபெற்றதைத் தொடர்ந்து இறுதிக்கட்ட சோதனை ஓட்டம் ரயில்வே பொதுமேலாளர் மல்லையா மற்றும் தென்னக ரயில்வே துறை உயரதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றது. 06701 என்ற எண் கொண்ட விரைவு ரயிலை பயணிகள் பெட்டிகளுடன் இணைத்து, மதுரையிலிருந்து தேனி வரை அதி வேகத்தில் இயக்கி இறுதி கட்ட சோதனை ஓட்டம் நடைபெற்றது.

    நான்கு புறமும் முகப்பு கண்ணாடி பொருத்திய சாளர எஞ்சின் மூலம் மதுரை-தேனி இடையே ரயில் பாதை வளைவு, சாலை சந்திப்புகள், பாலம், வடபழஞ்சி, உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, தேனி ரயில் நிலையங்கள் போன்றவைகள் ஆய்வு செய்யப்பட்டது. என்று ரயில்வே துறை அதிகாரிகள் கூறினா்.

    பதினோரு ஆண்டுகளுக்குப் பின்னர் தேனி மாவட்டத்திற்கு வர உள்ள ரயில் சேவையினால் தேனி மாவட்ட மக்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர் .

    செய்தியாளர்: சுதர்ஸன்
    Published by:Arun
    First published:

    Tags: Theni

    அடுத்த செய்தி