Home /theni /

"எங்க தேனிக்கும் ட்ரெயின் வந்தாச்சு.."- உற்சாகத்தில் துள்ளிக் குதிக்கும் உள்ளூர் மக்கள்

"எங்க தேனிக்கும் ட்ரெயின் வந்தாச்சு.."- உற்சாகத்தில் துள்ளிக் குதிக்கும் உள்ளூர் மக்கள்

தேனி

தேனி ரயில் நிலையம் வந்தடைந்த ரயில்

Train Service to Theni: மதுரை - தேனி இடையே மீட்டர்கேஜ் பாதை அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டு 11 ஆண்டுகளுக்கு பின்பு ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளதால், தேனி மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    கடந்த 2011ஆம் ஆண்டு மதுரை - தேனி - போடி  இடையேயான 90 கிலோ மீட்டர் தூரத்திற்கான மீட்டர்கேஜ் பாதை அகற்றப்பட்டு அகல ரயில்பாதை அமைக்கும் பணி தொடங்கியது. ஆரம்பம் முதலே நிதி ஒதுக்கீட்டில் சுணக்கம் ஏற்பட்டதால் ஆமை வேகத்தில் பணிகள் நடைபெற்றன. 2015-ஆம் ஆண்டுகள் பணிகள் நிறைவடையும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்திருந்த நிலையில், அப்போது முதற்கட்ட பணிகள் கூட நிறைவடையாமல் இருந்தது.

    இதனால், தேனி மற்றும் மதுரை மாவட்ட பொதுமக்கள் அரசியல் கட்சியினர் தொழிற்சங்க அமைப்புகள் என பலரும் ஒன்றிணைந்து அழுத்தம் கொடுத்ததன் காரணமாக மதுரை முதல் தேனி வரையிலான பணிகள் துரிதப்படுத்தப்பட்டது.

    மதுரை - போடிநாயக்கனூர் அகல ரயில் பாதை பணிகள் கடந்த 10 ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடைபெற்று வந்ததில், முதற்கட்ட பணிகள் முடிவடைந்து இன்று முதலாவதாக தினசரி ரயில் இயக்கப்பட்டது. தேனி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கனவு திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் நேற்று தொடங்கி வைத்தார்.

    இன்று முதல் தேனி - மதுரை ரயில் சேவை தொடங்கியதில், முதல்நாள் ரயிலில் பயணம் செய்த பொதுமக்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். நீண்ட நாட்களுக்கு பிறகு தேனி மாவட்டத்திற்கு ரயில் வருவதை தொடர்ந்து தேனி மாவட்ட மக்கள் மலர் தூவியும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

    இதுகுறித்து ரயிலில் பயணம் செய்த பொதுமக்கள் மற்றும் உள்ளூர் மக்கள் கூறுகையில், " தேனி மாவட்டத்திற்கு ரயில் வசதி இல்லை என்ற ஏக்கம் தற்போது தீர்ந்தது. எங்கள் தேனி மாவட்டத்திற்கும் ரயில் வந்து விட்டது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. முதல் கட்டமாக தேனி முதல் மதுரை வரை மட்டுமே ரயில் இயக்கப்படுகிறது. விரைவில் போடி வரை பணிகள் முடிவு பெற்றால் மதுரையில் இருந்து போடி வரை ரயில் இயக்கப்படும்.

    சேரன், வைகை எக்ஸ்பிரஸ் ரயில்களை தேனி வரை நீட்டிக்க வேண்டும். தேனி மாவட்டத்திற்கு 11 ஆண்டுகளுக்குப் பின்னர் ரயில் வந்தது மிகுந்த உற்சாகம் அளிக்கிறது என்றனர்.

    செய்தியாளர்: சுதர்ஸன்
    Published by:Arun
    First published:

    Tags: Theni, Train

    அடுத்த செய்தி