காதலர் தினம் நெருங்கி வரும் நிலையில் , தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உள்ள தனியார் கிப்ட் கடையில் புதிய வகையான பொருட்கள் நவீன எந்திரங்கள் மூலம் தயார் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
உணர்வுப்பூர்வமாக அனுபவிக்கும் காதலை அனைவரும் கொண்டாடும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. காதலர் தினத்தின் அழகை விரிவுபடுத்தி தங்களின் விருப்பமுள்ள நபர்களுக்கு காதலையோ அன்பையோ, ஏதேனும் பொருட்கள் கொடுத்து கிப்ட் மூலம் வெளிப்படுத்துவது வழக்கம்.
காதலர் தினம் நெருங்கி வருவதால், இந்த நேரத்தில் புதுமணத் தம்பதிகள், நீண்ட நாட்களாக காதலித்து வந்த காதலர்கள் என அனைவரும் ஆன்லைன் மூலமும் கடைவீதிகளிலும் தங்களின் விருப்பமுள்ளவர்களை கவரும் வகையிலான கிப்டுகளை வாங்க தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உள்ள சாரா கிப்ட் கடையில் காதலர் தினத்தை முன்னிட்டு பிரத்யோகமாக பல்வேறு வகையான கிப்ட் கள் தயாரிக்கப்பட்டு flipkart, அமேசான் மற்றும் இதர ஆன்லைன் தளத்திலும் , மற்ற கடைகளுக்கு மொத்த விற்பனையாகவும் விற்பனை செய்து வருகின்றனர். ஆன்லைன் வர்த்தகத் தளத்தில் கிடைக்கக்கூடிய பெரும்பாலான அழகுப் பொருட்கள் இங்கு நவீன இயந்திரங்கள் மூலம் தயார் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்த ஆண்டு காதலர் தினத்திற்காக பிரத்தியேகமாக புதிய வரவு கிப்ட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எந்த மாதிரியான புதிய வரவுகள் இந்த ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்பதை சாரா கிப்ட் கடையின் உரிமையாளர் ராஜசேகர் கூறுவதை இந்த தொகுப்பில் காணலாம் .
இது குறித்து கடையின் உரிமையாளர் ராஜசேகர் கூறுகையில் ," காதலர் தினத்தை முன்னிட்டு இங்கு தயாரிக்கப்படும் பெரும்பாலான பொருட்கள் ஆன்லைன் வர்த்தகத்தில் நன்றாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு வகையான பொருட்கள் அதிகமாக விற்பனை ஆகும்.
இந்த ஆண்டு கஸ்டமைஸ்டு போட்டோ பிரேம்ஸ் க்கு அதிக அளவில் ஆர்டர் குவிகிறது. மேலும் வாடிக்கையாளர் விருப்பத்திற்கு ஏற்ப பல வகையான மெட்டீரியல்களில் பல்வேறு வகையான வடிவமைப்புகளில் கிப்டுகள் தயார் செய்து விற்பனை செய்யப்படுகிறது. குறைந்தபட்சமாக 30 ரூபாய் முதல் கிப்ட்கள் உள்ளது. கடந்த ஆண்டை காட்டிலும் இந்தாண்டு விற்பனை அமோகமாகவே உள்ளது" என தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cumbum, Local News, Lovers day, Theni, Valentine's day, Valentine's Gifts