தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள நாராயணன் தேவன் பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வீரம்மா. இவரும் நாராயணதேவன் பட்டியை சேர்ந்த அஜித் என்ற நபரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர்.
இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களின் காதலுக்கு இரு தரப்பு பெற்றோர்களும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, வீரம்மா 2018ம் ஆண்டு கம்பம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் பிபிஏ இரண்டாம் ஆண்டு பயின்று கொண்டிருந்தபோது, வீரம்மா மற்றும் அஜித் ஆகிய இருவரும் பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
வீரம்மாவை திருமணம் செய்து கொண்ட அஜித் D. EEE முடித்து காமயகவுண்டன்பட்டியில் மின்சார வாரியத்தில் தற்கால பணியாளராக பணியாற்றி வந்துள்ளார். இருதரப்பு பெற்றோர்களும் இவர்களின் திருமணத்தை ஏற்காததால் அஜித் மற்றும் வீரம்மா கேகே பெட்டியில் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து அதில் குடியேறி வாழ்க்கையை தொடங்கியுள்ளனர்.
இதையும் படிங்க : தேனி கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி.. சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!
திருமணம் முடிந்த பின்பு இருதரப்பு பெற்றோர்களுக்கும் இவர்களுக்கும் எந்த தொடர்பு இல்லாமல் தனியாகவே வாழ்ந்து வந்துள்ளனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் பிறந்துள்ளது. மூன்று வயதில் ஒரு பெண் குழந்தையும், ஒரு மாத கைக்குழந்தையும் இருக்கும் நிலையில், எதிர்பாராத விதமாக 02.04.2022 அன்று பணிக்கு சென்றிருந்த அஜித் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளார்.
இருதரப்பு பெற்றோரின் எதிர்ப்புகளை மீறி திருமணம் செய்துகொண்டு வாழ்க்கையை தொடங்கிய நான்கு ஆண்டுகளில் இரண்டு கைக்குழந்தைகளுடன் கணவரை தொலைத்து வாழ்க்கையில் செய்வது அறியாமல் தவித்து வந்துள்ளார் வீரம்மா.
கணவரின் பெற்றோரும் இவரை ஏற்க மறுத்ததால் போதிய வருமானம் இன்றி தங்கி இருந்த வீட்டுக்கு வாடகை மற்றும் குழந்தைகளுக்கு உணவளிக்க முடியாமல் மிகுந்த வறுமைக்கு சென்று அவதிப்பட்டு உள்ளார் வீரம்மா.
இதனை அறிந்த வீரம்மாவின் பெற்றோர் வேறு வழியின்றி கே.கே.பட்டியில் இருந்து நாராயணன் தேவன்பட்டிக்கு வீரம்மாவை தங்கள் வீட்டுக்கு அழைத்துச் சென்று உள்ளனர்.
தற்போது வீரம்மா அவரின் பெற்றோரின் வீட்டில் இருந்து வருகிறார். வீரம்மாவின் பெற்றோர் தினசரி கூலி வேலைக்குச் சென்று பிழைப்பு நடத்தி வருகின்றனர். அவர்களும் மிகுந்த வறுமையில் இருந்து வருகின்றனர். வீரம்மாவின் தகப்பனார் உடல்நிலை குறைவால் தற்போது பணிக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே இருந்து வருகிறார் .
23 வயதாகும் வீரம்மா தற்போது கணவரையும் இழந்து, பெற்றோருக்கும் பாரமாக வாழ்க்கை இழந்து தவித்து வருகிறார்.
இதையும் படிங்க : ரூ.2 லட்சம் கல்வி உதவித்தொகைக்கு தேனி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்!
இந்நிலையில், நாராயணன் தேவன் பட்டியில் உள்ள கள்ளர் பள்ளியில் விதவை கோட்டாவில் சத்துணவு அமைப்பாளர் பணி காலியாக இருப்பதை அறிந்து கொண்ட வீரம்மா, சத்துணவு அமைப்பாளர் பணியை அரசு தனக்கு வழங்கினால் தனது வாழ்க்கையை நடத்த உதவியாக இருக்கும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.
கைக்குழந்தைக்கு பால் வாங்க கூட முடியாமல் மிகுந்த பொருளாதார நெருக்கடியிலும் இள வயதிலேயே கணவரை இழந்து வாழ்க்கையில் விரக்திக்குச் சென்ற வீரம்மா, தனக்கு அரசு ஏதேனும் ஒரு பணி அல்லது கள்ளர் பள்ளியில் விதவை கோட்டாவில் காலியாக உள்ள சத்துணவு அமைப்பாளர் பணியை தனக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் காமயகவுண்டன்பட்டி சேர்மன் , ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மகாராஜன் ஆகியோரிடம் மனு அளித்துள்ளார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இள வயதிலேயே மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வரும் வீரம்மாவிற்கு அரசு உதவி வேண்டுமென சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Theni