ஹோம் /தேனி /

தேனியில் குருவாக இருக்கும் சிவன்... நாகதோஷம் நீக்கும் தீர்த்ததொட்டி முருகன் கோயில்.!

தேனியில் குருவாக இருக்கும் சிவன்... நாகதோஷம் நீக்கும் தீர்த்ததொட்டி முருகன் கோயில்.!

தேனி

தேனி

Theni District News | தேனி மாவட்டம் போடி சாலையில் கொட்டக்குடி என்ற அழகிய கிராமம் உள்ளது. இந்த ஊரின் மேற்கு கரையில், ஆயிரம் ஆண்டு பழமையான விருப்பாட்சி ஆறுமுக நயினார் கோவில் உள்ளது.

  • Local18
  • 2 minute read
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டம் போடி சாலையில் கொட்டக்குடி என்ற அழகிய கிராமம் உள்ளது. இந்த ஊரின் மேற்கு கரையில், ஆயிரம் ஆண்டு பழமையான விருப்பாட்சி ஆறுமுக நயினார் கோயில் உள்ளது. மூலவராக முருகன் சிலை உள்ளது. இந்த முருகன் மயில் மேல் அமர்ந்து 6 முகங்களுடன் காட்சியளிக்கிறார்.

அருகே 7 தலை நாகம் மற்றும் மயில் வாகனத்துடன் நாக சுப்பிரமணியர் சிலை உள்ளது. மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் திரிதளம் என அழைக்கப்படுகிறது. ருத்ராட்ச மூர்த்தி என்ற பெயரில் இங்கு சிவனுக்கு தனி சன்னதி உள்ளது.

இங்கு சிவன் குருவாக இருப்பதாக ஐதீகம். அவரது சிலையுடன் ருத்ராட்ச மாலையும் வடிவமைக்கப்பட்டுள்ளது வேறெந்த கோயிலிலும் காண முடியாத சிறப்பாகும். மேலும் சன்னதியின் முன்பு நந்தி சிலை இல்லாதது குறிப்பிடத்தக்கது. கோயிலில் கொடிமரம் உள்ளது.

இதையும் படிங்க : சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்காக திறக்கப்பட்ட மேம்பாலத்தில் விரிசல்.. தேனியில் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி.. 

விவசாயி ஒருவரின் கனவில் தோன்றிய முருகப்பெருமான் அருகில் உள்ள விளை நிலத்தில் தனது சிலை உள்ளதாகவும், அதனை தோண்டியெடுத்து கோயில் எழுப்புமாறு கூறி மறைந்தார். இதனை அப்பகுதியை ஆண்ட குறுநில மன்னரிடம் விவசாயி தெரிவித்தார்.

மன்னர் உதவியுடன் தோண்டியெடுக்கப்பட்ட அந்த சிலைக்கு சிறிய அளவில் கோயில் எழுப்பப்பட்டது. பிற்காலத்தில் கோபுரத்துடன் கோயில் விரிவுபடுத்தப்பட்டது.

தைப்பூசம், தமிழ் வருட பிறப்பு, பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, கந்த சஷ்டி உள்ளிட்டவை இக்கோயிலின் விசேஷ தினங்கள். சித்திரை மாத பிறப்பன்று முருகன் சிலை கண்டெடுக்கப்பட்டது.

இதனால் அன்று விசேஷ அபிஷேகம் மற்றும் பூஜைகளுடன் விழா நடக்கிறது. தினமும் நாகசுப்பிரமணியருக்கு பூஜை செய்த பின்னரே மூலவருக்கு தீர்த்தத்தால் அபிஷேகம் செய்யப்படுகிறது.

நாக தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தோஷம் நீங்க வேண்டி இங்குள்ள தீர்த்த தொட்டியில் நீராடுகின்றனர். பின்னர் நாகசுப்பிரமணியருக்கு பாலாபிஷேகம் செய்து வழிபடுகின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

குடும்ப நலம், தொழில் முன்னேற்றம், கல்வி சிறக்க பக்தர்கள் வழிபடுகின்றனர். கோயில் நடை தினமும் காலை 6 மணி முதல் 1 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் 8 மணி வரையிலும் திறந்திருக்கிறது.

First published:

Tags: Local News, Theni