முகப்பு /தேனி /

கண்ணகி கோவில் விழாவை முன்னிட்டு தேனியில் உள்ளூர் விடுமுறை..

கண்ணகி கோவில் விழாவை முன்னிட்டு தேனியில் உள்ளூர் விடுமுறை..

X
மாதிரி

மாதிரி படம்

Kannagi Temple Festival | தமிழக - கேரள எல்லையில் அமைந்துள்ள மங்கலதேவி கண்ணகி கோயில் சித்திரை முழு நிலவு விழா நடைபெறவுள்ளதை முன்னிட்டு 05.05.2023 அன்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தேனி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டம் குமுளி அருகே உள்ள மங்கலதேவி கண்ணகி கோவில் சித்திரை முழுநிலா விழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். வரலாற்று சிறப்புமிக்க இந்த கோவிலுக்கு சித்ரா பௌர்ணமி திருவிழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம்.

இந்த ஆண்டு சித்திரை முழு நிலவு விழா மே 5ம் தேதி நடைபெற உள்ளது. விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. சித்திரை மாதம் பௌர்ணமி தினத்தன்று தமிழகம் மற்றும் கேரள பகுதியில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க மங்கலதேவி கண்ணகி கோயில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக தமிழகம் மற்றும் கேரள பக்தர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

கண்ணகி கோவில் விழா

தமிழக மற்றும் கேரள மக்களிடையே மிகவும் புகழ் பெற்ற சித்திரை முழு நிலவு கண்ணகி கோவில் திருவிழாவில் தேனி மாவட்ட மக்கள் பங்கேற்பதற்காக தேனி மாவட்டத்தில் சித்திரை முழுநிலவு விழா கொண்டாடப்பட உள்ள தினமான மே 5ம் தேதி (05/05/2023 வெள்ளிக்கிழமை ) அன்று தேனி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்திட மாவட்ட நிர்வாகம் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இவ்விடுமுறையினை ஈடுசெய்யும் வகையில் 20.05.2023 சனிக்கிழமை அன்று பணி நாளாக செயல்படும்  மேலும், மாவட்டத்திலுள்ள மாவட்ட கருவூலங்கள் சார்நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Local News, Theni