முகப்பு /தேனி /

தேனியில் சட்டக் கல்லூரி மாணவர்களின் திடீர் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு

தேனியில் சட்டக் கல்லூரி மாணவர்களின் திடீர் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு

X
சட்டக்

சட்டக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்  

Theni District | ஆட்சியரிடம் மனு அளிக்க மாணவர்கள் அனைவரையும் அனுமதி அளிக்காததால் மாணவர்கள் காவல்துறையினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Theni, India

சட்டக் கல்லூரி மாணவர் மீது பொய் வழக்குபோடப்பட்டதாகக் கூறி, தேனி சட்டக் கல்லூரி மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .

சட்டக் கல்லூரி மாணவர்கள் மீது கொடுக்கப்படும்பொய் புகார்களுக்கு, முறையான விசாரணை இன்றி போலீசார் வழக்கு பதிவு செய்வதாகக் கூறியும், இதனை கண்டித்தும், திருவாரூர் மாவட்டம் குடவாசல் காவல் துறையினர் தேனி சட்டக் கல்லூரி மாணவர் சரத்பாபு என்பவர் மீது போடப்பட்ட பொய் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என தேனி சட்டக் கல்லூரி மாணவர்கள் உரிமை பாதுகாப்பு குழு சார்பில் ஆட்சியர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மாணவர்கள் கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழங்குவதற்காக, போராட்டத்திற்கு வந்த மாணவர்கள் அனைவரையும் ஆட்சியர் அலுவலகத்திற்குள் செல்ல போலீசார் அனுமதி மறுத்ததால் போலீசாருக்கும் சட்டக் கல்லூரி மாணவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் போலீசார் உத்தரவின்படி 5 மாணவர்கள் மட்டும் ஆட்சியர் அலுவலகத்திற்குள் சென்று,மனு கொடுத்துதங்களது கோரிக்கை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

First published:

Tags: Local News, Theni