ஹோம் /தேனி /

'உக்ரைனில் இருந்து கடைசி விமானம்' நூல் மூலம் எழுத்தாளராக மாறிய தேனி பெண்..

'உக்ரைனில் இருந்து கடைசி விமானம்' நூல் மூலம் எழுத்தாளராக மாறிய தேனி பெண்..

X
கம்பம்:

கம்பம்: உக்ரைனில் இருந்து கடைசி விமானம் நூல் வெளியீடு.

Theni News : சிறு உயிர்களின் நேசம் பற்றி ஹைக்கூ கவிதைகளாக எழுதப்பட்ட உக்ரைனில் இருந்து கடைசி விமானம் நூல் வெளியீட்டு விழா தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் நடைபெற்றது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் பாரதி தமிழ் இலக்கிய பேரவை மற்றும் நூலக வாசகர் வட்டம் இணைந்து 55-வது தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு சர்ஜிலா பர்வீன் எழுதிய 'உக்ரைனிலிருந்து கடைசி விமானம்' என்ற நூல் வெளியிடப்பட்டது.

தேனி மாவட்டம் கம்பம் பகுதியைச் சேர்ந்த சர்ஜிலா பர்வீன் யாகூப் என்ற பெண், அரசுத் துறையில் பணியாற்றி வருகிறார். சிறுவயதிலிருந்தே எழுத்தின் மீது ஆர்வம் கொண்ட இவர் சிறு சிறு கவிதைகளை எழுத தொடங்கியுள்ளார். பின் மூன்று வரிகளைக் கொண்ட ஹைக்கூ வடிவில் ஆன கவிதைகளை எழுதி பலரிடம் பாராட்டைப் பெற்றுள்ளார்.

அதனை தொடர்ந்து அவர் தனது ஹைக்கூ கவிதைகளை ஒன்றிணைத்து ஒரு நூல் வெளியிட முடிவு செய்து, பல ஹைக்கூ கவிதைகள் அடங்கிய உக்ரைனில் இருந்து கடைசி விமானம் என்ற நூலை எழுதியுள்ளார்.

மேலும் படிக்க : ஒரு காலை தூக்கி உயர்ந்து நிற்கும் திருக்கோவிலூர் உலகளந்த பெருமாளை வழிபடுவதால் இத்தனை நன்மைகள் ஏற்படுமா?

இவர் எழுதிய நூலை தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உள்ள நேதாஜி அறக்கட்டளை வளாகத்தில் பாரதி தமிழ் இலக்கிய பேரவை மற்றும் நூலக வாசகர் வட்டம் இணைந்து 55 வது தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு வெளியிட்டுள்ளன. இந்த நூல் வெளியீட்டு விழாவானது தேனி மாவட்ட காங்கிரஸ் தலைவர் முருகேசன் முன்னிலையில் நடைபெற்றது.

நூல் வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்த மக்கள்..

மூன்று வரிகளைக் கொண்ட அதிக ஆழம் உள்ள ஹைக்கூ கவிதைகள் வாசிப்பாளர்களுக்கு மிகவும் பிடித்த ஒன்றாக உள்ளதால், சிறு உயிர்களின் நேசம் பற்றி ஹைக்கூ கவிதைகளை எழுதி நூலாக வெளியிட்டுள்ளதாக நூல் எழுத்தாளரான சர்ஜிலா பர்வீன் தெரிவித்துள்ளார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த நூல் வெளியீட்டு விழாவில் பாரதி தமிழ் இலக்கிய பேரவை தலைவர் பரதன், 5 மாவட்ட விவசாய சங்க பொதுச் செயலாளர் பெண் காட்சி கண்ணன், தேனி மாவட்ட காங்கிரஸ் தலைவர் முருகேசன், தேனி மாவட்டம் வரலாற்று ஆய்வு மையம் தலைவர் பஞ்சு ராஜா , கம்பம் பகுதி பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமான நபர்கள் கலந்து கொண்டனர்.

First published:

Tags: Local News, Theni