தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் வீட்டிலேயே இலவசமாக நாப்கின் தயாரித்து விற்பனை செய்யும் தொழில்நுட்பம் பெண்களுக்கு கற்றுத் தரப்பட்டது.
நாப்கின் தயாரிக்கும் பயிற்சி
குஜராத் மாநிலம் அகமதாபாத்தை தலைமை அலுவலகமாக கொண்டு செயல்பட்டு வரும் EDII ( Entrepreneurship Development Institute of India ) எனப்படும் அமைப்பு இந்தியா முழுவதிலும் உள்ள வேலைவாய்ப்பற்ற பெண்களையும், பொருளாதார ரீதியாக வாழ்வில் முன்னேற நினைக்கும் பெண்களையும் ஒருங்கிணைத்து அவர்களுக்கான இலவச தொழில் முனைவு மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்து வருகிறது.
அந்த வகையில் தற்போது தேனி மாவட்டம் கம்பம் நகர் வேலப்பர் கோயில் தெருவில் அமைந்துள்ள கல்வி ஹையர் இன்ஸ்டிட்யூட் தொழில் பயிற்சி மையத்தில் ESDI, EDII, Accenture நிறுவனம் சார்பில் வேலைவாய்ப்பற்ற பெண்களுக்கான இலவச தொழிற்பயிற்சி நவம்பர் மாதம் 15 ஆம் தேதி தொடங்கி ஒரு மாத காலமாக நடைபெற்று வந்துள்ளது.
இந்த தொழிற்பயிற்சி முகாமில் கம்பம் பகுதியில் வசித்து வரும் 50க்கும் மேற்பட்ட பெண்களுக்கு இலவசமாக வீட்டிலேயே எவ்வாறு குறைந்த செலவில் சானிட்டரி நாப்கின் தயாரிப்பது என்பது பற்றியும் தயாரிக்கப்பட்ட நாப்கின்களை எவ்வாறு சந்தைப்படுத்துவது உள்ளிட்ட பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : அட குப்பைக்கிடங்கா..! சுற்றுலாதலமா.. வியக்க வைக்கும் வல்லம் பேரூராட்சி
மேலும் இந்த முகாமில் மூலிகைகளால் தயாரிக்கப்படும் நாப்கின் வீட்டில் பெண்கள் எவ்வாறு கைகளாலை செய்வது என்பது பற்றிய பயிற்சியும்இந்த நாப்கின்களால் எந்த மாதிரியான பயன் ஏற்படும் என்பதை பற்றிய விழிப்புணர்வும் முகாமில் கலந்து கொண்டு பயிற்சி பெற்ற பெண்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
அதனைத் தொடர்ந்து முகாமில் கலந்து கொண்ட பெண்கள் மத்திய மாநில அரசின் திட்டங்கள் மூலம் வங்கிகளில் கடன் பெறுவது பற்றிய விவரங்களும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
இலவச பயிற்சி முகாமில் கலந்து கொண்டு பயிற்சி முடித்த பெண்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இந்த விழாவில் கம்பம் நகர்மன்றத் தலைவர் வனிதா நெப்போலியன் கலந்துகொண்டு முகாமில் கலந்து கொண்ட பெண்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி பெண்களை பாராட்டினார். இந்த பயிற்சி முகாமில் கல்வி ஹையர் இன்ஸ்டிட்யூட் உரிமையாளர் சிவராமகிருஷ்ணன், லலிதா, EDII அலுவலர் கார்த்திக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Napkin, Sanitary Napkin, Tamil News, Theni