Home /theni /

குமுளி மலைப்பாதையில் பரபரப்பு.. தத்ரூபமாக நடைபெற்ற ஒத்திகை நிகழ்ச்சி

குமுளி மலைப்பாதையில் பரபரப்பு.. தத்ரூபமாக நடைபெற்ற ஒத்திகை நிகழ்ச்சி

குமுளி

குமுளி மலைப்பாதையில் பரபரப்பு..

Theni Kumily Highway | தமிழக கேரள எல்லையான குமுளி மலைச்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டு வாகன விபத்துக்கள் ஏற்பட்டால் எவ்வாறு மீட்பது குறித்த மாநில அளவிலான நிலச்சரிவு மற்றும் விபத்து குறித்த ஒத்திகை பயிற்சி அனைத்து அரசு துறைகளின் சார்பில் நடத்தப்பட்டது. 

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Theni Allinagaram, India
தேசிய பேரிடர் மேலாண்மை குழு மூலமாக தமிழ்நாடு முழுவதும் செப்டம்பர் 1ம் தேதி பேரிடர் மீட்பு குறித்த ஒத்திகை நிகழ்ச்சி பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. கடலோர மாவட்டம் மற்றும் நீர்நிலைகள் நிறைந்த மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கின் போது எவ்வாறு பொதுமக்களை காப்பாற்றுவது குறித்த ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்று வரும் நிலையில் , தேனி மாவட்டத்தில் அதிகம் நிலச்சரிவு ஏற்படக்கூடிய குமுளி மலைச்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டு விபத்துக்கள் ஏதேனும் நிகழ்ந்தால் பொதுமக்களை எவ்வாறு காப்பாற்றுவது என ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

தேனி மாவட்டத்தின் தமிழக- கேரள எல்லையில் உள்ள லோயர் கேம்ப் - குமுளி மலைச்சாலையில் மழைக்காலங்களில் அடிக்கடி நிலச்சரிவு ஏற்படுவதும், வாகன விபத்துகளும் ஏற்படுவது வழக்கம். நிலச்சரிவு மற்றும் எதிர்பாராத விதமாக ஏற்படும் வாகன விபத்துகளில் சிக்கியவர்களை மீட்கும் ஒத்திகை நிகழ்ச்சியை தீயணைப்புத்துறை, வருவாய்த்துறை மற்றும் வனத்துறை உள்ளிட்ட அனைத்து அரசு துறைகளின் அலுவலர்களின் சார்பில் உத்தமபாளையம் கோட்டாட்சியர் கௌசல்யா தலைமையில் தத்ரூபமாக விளக்கி காட்டப்பட்டது .

தத்ரூபமாக நடைபெற்ற ஒத்திகை நிகழ்ச்சி


செயல் விளக்கம் :-

லோயர் கேம்ப் - குமுளி மலைச்சாலை 3வது கொண்டை ஊசி வளைவில் ஒரு தனியார் கல்லூரி பேருந்து நிலச்சரிவில் சிக்கி விபத்துக்குள்ளாகி இருந்தால் எவ்வாறு மீட்பு பணிகளை மேற்கொள்வது என்பது குறித்து தத்துரூபமாக செயல் விளக்கம் காட்டப்பட்டது .

ஒத்திகை நிகழ்ச்சிக்காக, மலைச்சாலையில் சுற்றுலாவிற்கு தேக்கடி நோக்கி சென்று மீண்டும் திரும்பி வரும்போது கல்லூரி பேருந்து நிலச்சரிவில் சிக்கி பேருந்து பள்ளத்திற்குள் கவிழ்ந்ததாக தோற்றுவிக்கப்பட்டது. இதனை அந்த வழியாக சென்ற பால்காரர் பார்த்து உடனடியாக கிராம நிர்வாக அலுவலரிடம் தகவல் தெரிவிக்கிறார். இதனைக் கேட்டுக் கொண்ட கிராம நிர்வாக அலுவலர் உடனடியாக தீயணைப்பு துறை காவல் துறை மற்றும் உத்தமபாளையம் கோட்டாட்சியருக்கு தகவல் தெரிவிக்கிறார்.

தத்ரூபமாக நடைபெற்ற ஒத்திகை நிகழ்ச்சி


உடனடியாக சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறையினர், காவல்துறையினர், வருவாய் துறையினர் , வனத்துறையினர் ஆகியோரும், 108 ஆம்புலன்ஸ் உடனடியாக மீட்பு பணிக்காக விரைந்து வந்து மலைச்சரிவில் சிக்கியுள்ள நபர்களை மீட்பது போன்றும், ஒவ்வொரு துறையினரும் மலைச்சாலையில் விபத்தில் சிக்கி இருக்கும் மக்களை எப்படி காப்பாற்றுவது என்பது குறித்து செயல்முறை விளக்கங்களையும் நேரடியாக பரபரப்புடன் செய்து காண்பித்தார்கள்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும் தங்களிடம் இருக்கும் உபகரணங்களை பயன்படுத்தியும் பொக்லைன் இயந்திரத்தை வரவழைத்து மீட்பு பணிகளை மேற்கொண்டும், தகவல் தொழில்நுட்பம் செயல்படாமல் போனால் , எவ்வாறு மேல் அதிகாரிகளை தொடர்பு கொள்வது உள்ளிட்ட ஒத்திகையும் , விபத்தில் சிக்கியவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சையை அளித்து மேல் சிகிச்சைக்கு தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்புவது குறித்து பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவினர் நேரடியாக செய்து காட்டினார்கள்.

ஒத்திகை நிகழ்ச்சி  
ஒத்திகை நிகழ்ச்சி


ஆர்வத்துடன் பொதுமக்கள் கண்டு களித்தனர் :-

விபத்தில் சிக்கியவர்களை மீட்டு லோயர் கேம்பில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாமில் சிகிச்சை பெற செய்வதும் , அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக விபத்தில் காயமடைந்த நபர்களையும் கொண்டு செல்வதும் உள்ளிட்ட ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த ஒத்திகை பயிற்சியில் வருவாய்த்துறை தீயணைப்பு துறை மற்றும் வனத்துறை காவல்துறை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இரண்டு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற ஒத்திகை நிகழ்ச்சியை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.  ஆம்புலன்ஸ் வாகனம், சைரன் சத்தம், அரசு அதிகாரிகள், மீட்பு படையினர் போன்றோரை பார்த்த பொதுமக்கள் உண்மையில் அங்கு ஏதேனும் விபத்து ஏற்பட்டுவிட்டதோ என அச்சம் கொண்டு, பின்னர் அங்கு நடைபெறுவது ஒரு ஒத்திகை என்பதை அறிந்து நிம்மதி பெருமூச்சு விட்டு நகர்ந்து சென்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Published by:Arun
First published:

Tags: Local News, Theni

அடுத்த செய்தி