முகப்பு /தேனி /

தேனி சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு குத்து விளக்கு பூஜை

தேனி சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு குத்து விளக்கு பூஜை

X
திருவிளக்கு

திருவிளக்கு பூஜை

Theni | பொம்மையகவுண்டன்பட்டியில் உள்ள சித்தி விநாயகர் திருக்கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டம் பொம்மையகவுண்டன்பட்டியில் உள்ள சித்தி விநாயகர் திருக்கோயிலில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு ஏராளமான பெண்கள் பங்கேற்று குத்துவிளக்கேற்றி சிறப்பு திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

குத்துவிளக்கு பூஜை

தேனி மாவட்டம் பொம்மையகவுண்டன்பட்டியில் அருள்மிகு சித்தி விநாயகர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த திருக்கோயிலில் புனரமைப்பு பணிகள் முடிவு பெற்று மகா கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது.

இதனை முன்னிட்டு பெண்கள் பங்கேற்கும் குத்து விளக்கு பூஜை கோயில் வளாகத்தில் பெற்றது. இந்த குத்து விளக்கு பூஜைகள் பங்கேற்பதற்காக அப்பகுதியை சேர்ந்த சுமார் 700க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கள் வீட்டில் இருந்து எடுத்து வரப்பட்ட குத்து விளக்கில் விளக்கேற்றி சிறப்பு திருவிளக்கு பூஜை செய்தனர்.

தங்கள் குடும்பம் மற்றும் தங்களை சுற்றி உள்ளவர்கள் அனைவரும் நலம் பெற வேண்டி 700 க்கும் மேற்பட்ட பெண்கள் திருவிளக்கேற்றி வழிபாடு செய்து சிறப்பு திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

நாமக்கல்லில் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டிகள் துவக்கம்..!

பின்னர் திருவிளக்கு பூஜையில் பங்கேற்ற பெண்களுக்கு யாகசாலையில் பூஜை செய்த மஞ்சள் குங்குமம் வழங்கப்பட்டது.

First published:

Tags: Local News, Theni