முகப்பு /தேனி /

தேனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் பௌர்ணமி பூஜை.. பெண்கள் சிறப்பு வழிபாடு..

தேனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் பௌர்ணமி பூஜை.. பெண்கள் சிறப்பு வழிபாடு..

X
தேனி

தேனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் பௌர்ணமி பூஜை

Theni News : தேனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் பௌர்ணமியை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரங்கள் நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Theni, India

தேனியில் அமைந்துள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் பௌர்ணமியை முன்னிட்டு மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து, மீனாட்சி அம்மனுக்கும், உற்சவர் அம்மனுக்கும் பால், தயிர், சந்தனம், தேன், கரைசல் மாவு, இளநீர் உள்ளிட்ட அபிஷேக பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

பின்னர் அம்மனுக்கு பச்சை பட்டு உடுத்தி ஆபரணங்கள் அணிந்து வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். இதில் ஏராளமான பெண்கள் பங்கேற்று தங்கள் வீட்டில் இருந்து எடுத்துவரப்பட்ட குத்துவிளக்கில் விளக்கேற்றி திருவிளக்கு பூஜை செய்தனர். மேலும் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு பாடல்களை பாடி பெண்கள் திருவிளக்கேற்றி மீனாட்சி அம்மனை வழிபட்டனர்.

இதையடுத்து, அலங்கரிக்கப்பட்ட மீனாட்சி அம்மனுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பெண்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு பௌர்ணமி நாளில் மீனாட்சி அம்மனை வழிபட்டு சென்றனர்.

First published:

Tags: Local News, Theni