Home /theni /

தமிழக - கேரள மக்கள் ஒன்றிணைந்து கொண்டாடிய ஓணம்.. விளையாட்டு போட்டிகளால் களைகட்டிய குமுளி..

தமிழக - கேரள மக்கள் ஒன்றிணைந்து கொண்டாடிய ஓணம்.. விளையாட்டு போட்டிகளால் களைகட்டிய குமுளி..

குமுளியில்

குமுளியில் ஓணம் கொண்டாட்டம்

Theni Onam Celebration | தேனி மாவட்டம் தமிழக கேரளா எல்லைப் பகுதியில் அமைந்துள்ள குமுளியில் ஓணம் பண்டிகையை ஒட்டி பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India
கேரள மாநிலத்தின் முக்கிய திருவிழாவான ஓணம் பண்டிகையை மலையாளி மக்கள் மிக விமரிசையாக கொண்டாடுவது வழக்கம். தமிழகத்தை ஒட்டியுள்ள கேரள மாநிலத்தின் எல்லைப் பகுதிகளில் ஓணம் கொண்டாட்ட நிகழ்வுகள் நடைபெறும். குமுளி ஏராளமான தமிழர்கள் குடியேறியுள்ள பகுதியாகும். இங்கு ஏலக்காய் தோட்டங்களிலும், வியாபாரத்திலும் ஆயிரக்கணக்கான தமிழர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

குமுளியில் ஓணம் கொண்டாட்டம்


அந்த வகையில் தேனி மாவட்டம் தமிழக - கேரளா எல்லைப் பகுதியில் அமைந்துள்ள குமுளி பகுதியில் தமிழக மற்றும் கேரள மக்கள் ஒன்றிணைந்து ஓணம் பண்டிகையை வெகு சிறப்பாக கொண்டாடினர். கடந்த மாதம் 30 ஆம் தேதி தொடங்கிய ஓணம் பண்டிகை 10 நாட்கள் நடைபெற்றது.

குமுளியில் ஓணம் கொண்டாட்டம்


கடந்த இரண்டு ஆண்டுகள் ஓணம் பண்டிகை குமுளியில் களையிழந்து காணப்பட்ட நிலையில் இந்த ஆண்டு வெகு சிறப்பாக நடைபெற்றது . இதில் ஓணம் பண்டிகையின் முக்கிய நாளான திருவோணம் மற்றும் கடைசி ஓணம் நாளில் குமுளி வியாபாரிகள் சங்கம் சார்பாக பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது.

குமுளியில் ஓணம் கொண்டாட்டம்


கயிறு இழுத்தல் போட்டி


மியூசிக்கல் சேர், கயிறு இழுக்கும் போட்டி, சைக்கிள் ரேஸ் உள்ளிட்ட பல்வேறு போட்டியில் நடைபெற்றது. ஆடல் பாடலுடன் உற்சாகமாக போட்டிகளில் பங்கு பெற்று பொதுமக்கள் உற்சாகமாக ஓணம் பண்டிகை கொண்டாடினர் . போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு தொகையும் வழங்கப்பட்டது

விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசளிப்பு


உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Published by:Arun
First published:

Tags: Local News, Onam, Theni

அடுத்த செய்தி