ஹோம் /தேனி /

குமுளியில் இரவு நேரத்தில் பேருந்துகள் முறையாக இயக்கப்படாததால் மக்கள் அவதி

குமுளியில் இரவு நேரத்தில் பேருந்துகள் முறையாக இயக்கப்படாததால் மக்கள் அவதி

குமுளி

குமுளி

Theni | தேனி மாவட்ட எல்லை பகுதியான குமுளியில் இருந்து இரவு நேரத்தில் முறையாக பேருந்து இயக்கப்படாதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டத்திலுள்ள தமிழக-கேரள எல்லையான குமுளியில், பேருந்து நிலையம் அமைக்கும் பணி பல ஆண்டுகளாக முடங்கிக் கிடக்கும் நிலையில், குமுளியில் இருந்து இரவு நேரத்தில் முறையாக பேருந்து இயக்கப்படாதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர் . இரவு நேரத்தில் அதிக பேருந்தை இயக்கதமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

தேனி மாவட்டத்தின் தமிழக - கேரள மாநிலங்களின் இணைப்பு எல்லையாக குமுளி உள்ளது. இங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், புதுவை, சென்னை, பெங்களூரு போன்ற வெளிமாநிலங்களுக்கும் 100-க்கும் மேற்பட்ட அரசு, தனியாா் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தமிழக எல்லையான குமுளியில், பல ஆண்டுகளுக்கு முன்பு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் ஒரு பணிமனை அமைக்கப்பட்டது. ஆனால், தற்போது குமுளி மலைப்பகுதியில் பேருந்து நிலையம் இல்லாத நிலையில் உள்ளது. பேருந்து நிலையம் அமைக்கப்படாததால், குமுளிக்கு வரும் பேருந்துகள் மலைச் சாலையின் இருபுறமும் பேருந்துகள் நிறுத்தப்படுகின்றன. இதனால் இதர வாகனங்கள் செல்ல முடியாமல் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

குமுளி மலைப் பகுதியில் ஒரு பேருந்து நிலையம் உள்ளது. ஆனால் அது கேரள மாநிலத்திற்கு சொந்தமான பேருந்து நிலையமாகும். கேரள மாநில பேருந்து நிலையத்தில் கடைகள், கழிப்பறை வசதி, பேருந்து நிறுத்துமிடம் என அனைத்து வசதிகளும் உள்ளது. ஆனால் தமிழக மக்கள் பயன்பெறும் வகையில் , தமிழக குமுளிப் பகுதியில் ஒரு பேருந்து நிலையம் வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்கள் மத்தியில் பல ஆண்டுகளாக வைக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க : தேனி கலெக்டர் அலுவலகத்தில் அரசு ஓய்வூதியர் சங்கத்தினர் திடீர் ஆர்ப்பாட்டம் 

குமுளி பேருந்து நிலையத்தில் இருந்து பொதுமக்கள் பேருந்து ஏறி செல்வதற்காக எந்த ஒரு நிழற்குடையும் அமைக்கப்படாமல் இருப்பதால் மழைக்காலங்களில் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். அதேபோல அங்கு முறையாக கழிப்பிட வசதி இல்லாததால் பெண்கள் மற்றும் வயதானவர்கள் குழந்தைகள் என பலரும் அவதி அடைகின்றனர்.

குறிப்பாக குமுளி பேருந்து நிலையத்திலிருந்து இரவு நேரத்தில் பேருந்துகள் இயக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு பொதுமக்கள் மத்தியில் நிலவி வருகிறது. தற்போது பருவ மழை பெய்து வரும் நிலையில் , இரவு 8 மணிக்கு மேல் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே பேருந்துகள் இயக்கப்படுவதால் பொதுமக்கள் கொட்டும் மழையில் நனைந்தபடி நீண்ட நேரம் காத்திருக்கும் சூழல் உருவாகியுள்ளது.

இரவு 10 மணிக்கு மேல் குமுளியில் இருந்து தமிழக பகுதிக்கு பேருந்துகள் முறையாக இயக்கப்படாததால் பொதுமக்கள் நீண்ட நேரமாக குமுளி பேருந்து நிலையத்தில் காத்திருந்து பேருந்து குறித்து அரசு போக்குவரத்து அலுவலர்களிடம் கேட்ட பொழுது அவர்கள் முறையாக பதில் கூறாததால் பொதுமக்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதமும் ஏற்பட்டுள்ளது.

இரவு நேரத்தில் பொதுமக்கள் கை குழந்தையுடன் நீண்ட நேரம் காத்திருந்து பேருந்து ஏறும் அவல நிலை உள்ளதால், பெண்கள் பல்வேறு வகைகளில் பல சிக்கல்களை சந்திப்பதாகவும் சமூக விரோத செயல்கள் நடைபெறும் இடமாகவும் குமுளி பேருந்து நிலையம் இருப்பதால் , இரவு நேரத்தில் கூடுதல் பேருந்து இயக்க அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை பொதுமக்கள் முன்வைக்கின்றனர்.

இதையும் படிங்க : “விவசாயம் செய்ய முடியாமல் தவிக்கிறோம்” - தேனி நெடுஞ்சாலையில் விவசாயிகள் திடீர் போராட்டம்

இதுகுறித்து பொதுமக்கள் சிலர் கூறுகையில், “கழிப்பறை, குடிநீர், நிழற்க்கொடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால், பெண்கள் மற்றும் குழந்தைகள் அவதிக்குள்ளாகின்றனர். மழைக் காலங்களில் பயணிகள் நனைந்து கொண்டே பேருந்துகளுக்காகக் காத்திருக்கும் அவல நிலையில் உள்ளது,

குமுளி பேருந்து நிலையம். மேலும் விவசாயிகள், தொழிலாளா்கள், சுற்றுலாப் பயணிகள், அய்யப்ப பக்தா்கள் ஆகியோா் வந்து செல்லும் பகுதி என்பதால், இரவு நேரத்தில் பேருந்து இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. நீண்ட நேரமாக காத்திருந்து பேருந்து ஏறும் அவலம் தொடர்கிறது. வெளியூர்களிலிருந்து வரும் தொலைதூர பேருந்துகள் குமுளி வரை வருவதில்லை . கம்பத்திலேயே நிறுத்தப்படுகின்றன. தொலைதூரப் பேருந்துகளை குமுளி வரை இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Published by:Karthi K
First published:

Tags: Local News, Theni