Home /theni /

2 வாரங்களாக கும்பக்கரை அருவிக்கு பூட்டு.. மீண்டும் திறப்பது எப்போது?

2 வாரங்களாக கும்பக்கரை அருவிக்கு பூட்டு.. மீண்டும் திறப்பது எப்போது?

கும்பக்கரை

கும்பக்கரை அருவி

Periyakulam Kumbakarai Falls : தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான கும்பக்கரை அருவியில் நீர்வரத்து அதிகமாக காணப்படுவதால் 14 நாட்களாக கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
தேனி மாவட்டத்தில் பல்வேறு சுற்றுலா தலங்கள் இருந்தாலும் பெரியகுளம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில் அமைந்துள்ள கும்பக்கரை அருவிக்கு பெருவாரியான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். கொடைக்கானல் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் இருந்து உருவாகும் நீர்வரத்தின் மூலம் கும்பக்கரை அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

தற்போது கொடைக்கானல் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது . அருவி பகுதியில் சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாத அளவிற்கு நீர் வரத்து அதிகமாக உள்ளது.

கும்பக்கரை அருவி


இதன் காரணமாக கடந்த மாதம் 28ம் தேதி கும்பக்கரை அருவிக்கு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி இல்லை என்று வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து கும்பக்கரை அருவியில் நீர்வரத்து அதிகமாக உள்ளதால் 13 நாட்களை கடந்தும் கூட கும்பக்கரை அருவி திறக்கப்படாமலேயே உள்ளது.

கும்பக்கரை அருவி


சில சுற்றுலா பயணிகளுக்கு கும்பக்கரை அருவி மூடப்பட்டிருக்கும் தகவல் அறியாமல் அருவி பகுதிக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்று வருகின்றனர். கும்பக்கரை அருவியில் நீர்வரத்து சீரான பிறகு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவர் எனவும் , நீர்வரத்து குறைந்த பிறகு முறையான அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கும்பக்கரை அருவி


உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Published by:Arun
First published:

Tags: Local News, Theni

அடுத்த செய்தி