முகப்பு /தேனி /

பல்லவராயன்பட்டி ஜல்லிக்கட்டில் முதலிடம் பிடித்த குலமங்கலம் காளை.. கார் கிடைக்காத ஏக்கத்தில் உரிமையாளர்..

பல்லவராயன்பட்டி ஜல்லிக்கட்டில் முதலிடம் பிடித்த குலமங்கலம் காளை.. கார் கிடைக்காத ஏக்கத்தில் உரிமையாளர்..

X
பல்லவராயன்பட்டி

பல்லவராயன்பட்டி ஜல்லிக்கட்டு

Theni Jallikattu | தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள பல்லவராயன் பட்டி நடைபெற்ற ஜல்லிக்கட்டில் அதிக காளைகளை அடக்கி வெற்றி பெற்ற நபருக்கு முதல் பரிசாக காரும், போட்டியின் சிறந்த மாட்டிற்கு இருசக்கர வாகனமும் பரிசாக வழங்கப்பட்டது. 

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள பல்லவராயன் பட்டியில் ஸ்ரீவல்லடிகாரசுவாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த இந்த ஜல்லிக்கட்டு போட்டி பிப்ரவரி 15ம் தேதி துவங்கி நடைபெற்றது. காலை 7 மணி அளவில் துவங்கிய ஜல்லிக்கட்டு போட்டியில் 400க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்டனர். ஒரு சுற்றுக்கு 50 வீரர்கள் என மொத்தம் 8 சுற்றுகளாக போட்டி நடைபெற்று மாலை 5 மணி அளவில் போட்டி நிறைவு பெற்றது.

இந்த போட்டியில் 28 காளைகளை அடங்கி அலங்காநல்லூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் கார்த்திக் முதல் பரிசான காரை வென்றார். 2ம் பரிசினை 17 காளைகள் அடக்கி கருமாத்துரை சேர்ந்த கார்த்திக் என்ற நபர் இருசக்கர வாகனத்தை பரிசாக வென்றார். அதேபோல் போட்டியின் சிறந்த மாடாக தேர்வு செய்யப்பட்ட மதுரை மாவட்டம் குலமங்கலத்தைச் சேர்ந்த வக்கீல் திருப்பதியின் காளையின் உரிமையாளருக்கு இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது.

இதுகுறித்து சிறந்த மாடாக வெற்றி பெற்ற மாட்டிற்கு பரிசாக கார் வழங்கப்படும் என எதிர்பார்த்து தேனி மாவட்டம் பல்லவராயன் பட்டி பகுதி நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொண்டதாக சிறந்த மாடாக வெற்று பெற்று சிறந்த மாட்டிற்கான முதல் பரிசை வென்ற மாட்டின் உரிமையாளர் கூறினார். இந்த போட்டியில் பங்கேற்று சிறந்த மாடாக வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளருக்கு இரு சக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Local News, Theni