தேனி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற குச்சனூர் அருள்மிகு சுயம்பு சனீஸ்வர பகவான் கோயிலில் இரண்டு வருடங்களுக்கு பிறகு ஆடித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில், மூன்றாவது ஆடி சனிக்கிழமையான இன்று நேர்த்திக்கடன் செலுத்த வெளி மாவட்டங்களில் இருந்தும் அதிகளவிலான பக்தர்கள் குவிந்தனர்.
புகழ்பெற்ற திருக்கோயில்
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே, குச்சனூர் சுரபி நதிக்கரையில் சனீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இங்கு நவக்கிரக தெய்வங்களில் ஒருவரான சனி பகவான், சுயம்பு வடிவில் மூலவராகக் காட்சி தருகிறார். குறிப்பாகத் தமிழ்நாட்டில் திருநள்ளாற்றுக்கு அடுத்தபடியாக பிரசித்தி பெற்ற கோயிலாக குச்சனூர் சனீஸ்வரர் ஆலயம் உள்ளது.
இக்கோயில் திருவிழா ஆண்டுதோறும் ஆடி மாதம் ஐந்து சனிக்கிழமைகளில் நடைபெறும். தேனி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளிலிருந்தும் மதுரை, திண்டுக்கல், விருதுநகர் போன்ற மாவட்டங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவிழாவில் கலந்துகொண்டு சாமியைத் தரிசனம் செய்வர்.
அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டுக்கான ஆடித் திருவிழா ஜூலை 23 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 20 ஆம் தேதி வரை ஒவ்வொரு சனிக்கிழமையும் நடைபெற்று வருகிறது .
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இக்கோயிலில் நடைபெற்ற ஆடித்திருவிழாவில் பக்தா்கள் அனுமதிக்கப்படவில்லை. தளா்வு அறிவிக்கப்பட்ட பின்பு, இந்தாண்டு ஆடித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி ஆகஸ்ட் 20 ஆம் தேதி வரை ஒவ்வொரு சனிக்கிழமையும் நடைபெற உள்ளது.
குச்சனூர் சனீஸ்வர பகவான் ஆடி திருவிழாவில் இரண்டு வார சனிக்கிழமை திருவிழா முடிவுற்று நேற்று சனீஸ்வர பகவானுக்கும் நீலாதேவிக்கும் திருக்கல்யாணம் நடைபெற்ற நிலையில் இன்று மூன்றாவது வார ஆடித் திருவிழா வெகு கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
குச்சனூர் திருவிழாவில் 3-வது சனிக்கிழமையான இன்று ஏராளமான பொதுமக்கள் சாமி தரிசனத்திற்காக கோவிலில் குவிந்தனர். மூன்றாவது சனிக்கிழமையில் குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயிலில் எள் தீபம் சுரபி நதி கரையோரம் ஏற்றும் போது தங்கள் மீதுள்ள சனிபகவானின் தாக்கம் குறைந்து குடும்பம் இன்புறும் என்பது ஐதீகமாக உள்ளதால் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கோவிலில் தரிசனத்திற்காக குவிந்தனர்.
உங்கள் நகரத்திலிருந்து(தேனி)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.