முகப்பு /தேனி /

கூடலூர் சாய்பாபா கோயிலில் கும்பாபிஷேக விழா.. திரளான பக்தர்கள் பங்கேற்பு..  

கூடலூர் சாய்பாபா கோயிலில் கும்பாபிஷேக விழா.. திரளான பக்தர்கள் பங்கேற்பு..  

X
கூடலூர்

கூடலூர் சாய்பாபா கோயிலில் கும்பாபிஷேக விழா

Koodalur Saibaba Temple : தேனி மாவட்டம் கூடலூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஸ்ரீசீரடி சாய்பாபா கோயிலில் மகா கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது.

  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டம் கூடலூரில் உள்ள ஸ்ரீசாய் நகரில் ஸ்ரீ சீரடி சாய்பாபா திருக்கோவில் அமைந்துள்ளது. பொதுமக்களின் அமைதி வேண்டுதல்களை நிறைவேற்றும் விதமாக அந்தப் பகுதியில் புதிதாக ஸ்ரீசாய்பாபா கோவில் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த கோயிலில் மஹா கும்பாபிஷேக விழா ஏராளமான பக்தர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இந்த கும்பாபிஷேக நிகழ்வில் சிவாச்சாரியார்களைக் கொண்டு பல்வேறு பூஜைகளை நடத்தப்பட்டு, சிறப்பு அபிஷேக வழிபாடுகள் செய்யப்பட்டது. அதன் பின்னர் கோவிலின் விமான கலசத்திற்கு புனித நீரினை ஊற்றி விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு தீர்த்தமாக தெளித்தனர்.

கூடலூர் சாய்பாபா கோயிலில் கும்பாபிஷேக விழா

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் கலச புனித நீர் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் கம்பம் கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளைச் சேர்ந்த ஆயிரகணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு இறை வழிபாடு நடத்தினர்.

First published:

Tags: Local News, Theni