தேனி மாவட்டம் கூடலூர் அரசு பள்ளி 12ம் வகுப்பில் சாதனை படைத்துள்ளது.
12ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில் தேனி மாவட்டத்தில் 8 அரசு பள்ளிகளில் 100% தேர்ச்சி பதிவாகியுள்ளது. இதில் கூடலூர் பகுதியில் இயங்கி வரும் இராஜாங்கம் நினைவு அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் 100% தேர்ச்சி பதிவாகியது எப்படி , மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட பயிற்சி முறைகள் குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.
12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ் டூ தேர்வுகள் கடந்த மார்ச் 13-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 3-ம் தேதிவரை நடைபெற்றன. இதில், 8,51,000 பேர் கலந்துகொண்டனர். விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவடைந்த நிலையில், தேர்வு முடிவுகளை சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நேற்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்.
அதன்படி, தேனி மாவட்டத்தில் 93.17% பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்வு எழுதிய 13,917 பேரில், 6,350 ஆண் மாணவர்களும், 6,616 பெண் மாணவர்களும் தேர்ச்சிப் பெற்றனர். இதில் 33 மெட்ரிகுலேஷன் பள்ளிகள், 5 அரசு உதவி பெரும் பள்ளிகள், 8 அரசு பள்ளிகள் என 46 பள்ளிகளில் 100 சதவீதம் தேர்ச்சி பதிவாகியது.
இதையும் படிங்க : ஒரு மீனில் இத்தனை வெரைட்டியா? மதுரையில் கிராமத்து சுவையில் அட்டகாசமான அசைவ ஹோட்டல்!
100% தேர்ச்சி
தேனி மாவட்டத்தில் 100% தேர்ச்சி பதிவு செய்துள்ள 8 அரசு பள்ளிகளில் கூடலூரில் உள்ள இராஜாங்கம் நினைவு கள்ளர் அரசு மேல்நிலைப் பள்ளியும் ஒன்று. இந்தப் பள்ளியில் 100% மாணவ மாணவிகள் பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றதற்கு பள்ளியில் வழங்கப்பட்ட சிறப்பு பயிற்சிகளும் மாணவர்கள் மேல் ஆசிரியர்கள் எடுத்துக்கொண்ட அக்கறையும் தான் காரணம் என மாணவர்களின் பெற்றோர்கள் கூறி வருகின்றனர்.
கூடலூரில் சுமார் 90 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. ராஜாங்கம் நினைவு கள்ளர் அரசு மேல்நிலைப் பள்ளி. அரசு பள்ளிகளில் கட்டமைப்பு வசதியும் கற்பிக்கும் முறையும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளை காட்டிலும் குறைவாகத்தான் இருக்கும் என்ற எண்ணம் பலருக்கும் இருந்து வந்தது.
ஆனால் தற்போதைய காலகட்டத்தில் அரசு பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட்டும் அரசு பள்ளிகளில் கற்பிக்கும் முறையும், கற்றல் முறையும் மேம்படுத்தப்பட்டுள்ள நிலையில் அரசு பள்ளிகளில் மாணவ மாணவிகளை சேர்க்க பெற்றோர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு அரசால் வழங்கப்படும் சலுகைகளும் ஏழை எளியவருக்கு மிகுந்த பயனுள்ளதாக அமைகிறது.
மாணவர்களின் பொறுப்பு
தொடர்ந்து அரசு பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளும் நவீன தொழில்நுட்பங்களும் அறிமுகப்படுத்துவது மட்டுமல்லாமல் மாணவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் அரசால் செய்யப்பட்டு வருகிறது. தனியார் பள்ளிகளுக்கு இணையாக அனைத்து வசதிகளும் பெரும்பாலான அரசு பள்ளிகளில் கிடைப்பதால் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தொடர்ந்து சதித்து வருகின்றனர்.
இதையும் படிங்க : புதுச்சேரி கூத்தாண்டவர் கோவில் தேர் திருவிழா..! வடம் பிடித்து பக்தர்கள் பரவசம்..!
தற்போது அரசு பள்ளிகளிலும் 100% தேர்ச்சி பதிவாகி வரும் நிலையில் கூடலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் இரண்டாம் வகுப்பில் 100% தேர்ச்சி பதிவாகியது கூடலூர் பகுதி மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
கூடலூர் ராஜாங்கம் நினைவு மேல்நிலைப் பள்ளி
90 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் கூடலூர் இராஜாங்கம் நினைவு மேல்நிலைப் பள்ளியில் தற்போது நவீன கட்டடங்கள் , உள்கட்டமைப்பு வசதிகள், கணினி வசதி, கூடுதல் பயிற்சி வகுப்புகள் , திறன் மேம்பாட்டு பயிற்சி , சிலம்பம் விளையாட்டு என அனைத்து துறையிலும் பள்ளி மேம்பட்டு காணப்படுகிறது . இதனால் ஒவ்வொரு ஆண்டும் இப்பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
தற்போது இந்த பள்ளியில் இரண்டாம் வகுப்பில் 31 மாணவர்கள் பயின்ற நிலையில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். பள்ளியில் ஏற்கனவே 3 முறை 100% தேர்ச்சி பதிவாகிதும் குறிப்பிடத்தக்கது. பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகள் மீது பள்ளியின் ஆசிரியர்கள் தனி கவனம் செலுத்தி ஒவ்வொரு மாணவர்க்கும் அவர்களின் கல்வித் திறனுக்கு ஏற்ப பாடம் கற்பித்து வருவதாக பள்ளியின் தலைமை ஆசிரியர் தெரிவித்தார்.
சிறப்பு பயிற்சி
மாணவர்கள் ஓரிரு வார்த்தைகள் வினா விடை என எந்த பகுதியில் பலவீனமாக உள்ளான் என்பதை கண்டறிந்து அவர்களுக்கு தனியாக சிறப்பு பயிற்சி அளித்து உள்ளனர். மாணவர்களுக்கு முழு நேரம் படிப்பை மட்டும் திணிக்காமல் அவ்வப்போது விளையாட்டும் பொழுதுபோக்கும் ஊக்கம் அளிக்கும் வார்த்தைகளும் அளிக்கப்பட்டதால் மாணவர்களுக்கு படிப்பின் மீது ஆர்வம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கின்றனர் பள்ளியின் தலைமை ஆசிரியர்.
அவ்வப்போது ஆசிரியர் கூட்டம் நடத்துவது , பள்ளிக்கு விடுப்பு எடுக்கும் மாணவர்கள் மீது தனி கவனம் செலுத்துவது , மாணவர்களுக்கு பள்ளியிலேயே படிப்பதற்கான வசதியை ஏற்படுத்தி தருவது, மாணவர்களும் ஆசிரியர்களும் நண்பர்கள் போல் பழகுவது உள்ளிட்ட காரணங்களும் மாணவர்கள் 100% தேர்ச்சி பெற்றதற்கு காரணம் என கூறினார் பள்ளியின் தலைமை ஆசிரியர் .
12ம் வகுப்பில் 100% தேர்ச்சி பெற்றுள்ள நிலையில் 10ம் வகுப்பு தேர்வில் 100% தேர்ச்சியை எதிர் பார்த்து காத்திருப்பதாகவும் , பள்ளியின் செயல்பாடுகளை கண்டு தற்போது பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகமாக இருப்பதாகவும் கூறினார் பள்ளியின் தலைமை ஆசிரியர் டேனியல். தற்போது இந்த பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பில் இரண்டு குரூப்புகள் மட்டுமே உள்ளது. குரூப் 1 இல் தமிழ், ஆங்கிலம் , இயற்பியல், வேதியல் , கணினி அறிவியல், கணிதம் ஆகிய படங்கள் அடங்கியுள்ளது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
குரூப் இரண்டில் தமிழ், ஆங்கிலம் , இயற்பியல், வேதியல் , கணினி அறிவியல், உயிரியல் ஆகிய படங்கள் அடங்கியுள்ளது. தற்போது இந்த பள்ளியில் பாடப்பிரிவு அதிகரிக்கப்பட்டால் மேலும் மாணவர் சேர்க்கை அதிகமாகும் எனவும் , இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் தகவல் அளித்துள்ளதாகவும் பள்ளியின் தலைமை ஆசிரியர் தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Theni