ஹோம் /தேனி /

தொடர் மழையால் வாழ்வாதாரம் இழக்கும் பாளையம், கோம்பை பகுதி செங்கல் சூளை தொழிலாளர்கள்..

தொடர் மழையால் வாழ்வாதாரம் இழக்கும் பாளையம், கோம்பை பகுதி செங்கல் சூளை தொழிலாளர்கள்..

தேனி

தேனி - முடங்கிய செங்கல் சூளை தொழில்..

Theni Brick Companies : தேனி மாவட்டத்தில் தொடர்மழை மழை பெய்து வருவதால், செங்கல் உற்பத்தி முடங்கியுள்ளதால் கூலித் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க முடியாமல் கையறு நிலையில் தவித்து வருகின்றனர் சூளை உரிமையாளர்கள்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Theni Allinagaram | Theni

தேனி மாவட்டம் உத்தமபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட செங்கல் காளவாசல்கள் இயங்கி வருகின்றன. கம்பம், சுருளிப்பட்டி, தேவாரம், சின்னமனூர், கோம்பை, கற்கொடை போன்ற பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் காளவாசல் தொழிலை நம்பி வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றனர்.

உத்தமபாளையம் அருகே உள்ள கோம்பை பகுதிகளில் மட்டும் 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் செங்கல் காளவாசல் தொழிலை நம்பியே பிழைப்பு நடத்தி வருகின்றனர். தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாகவே தொடர் மழை பெய்து வரும் நிலையில் செங்கல் காளவாசல் தொழில் முற்றிலுமாக முடங்கியுள்ளது.

செங்கல் காளவாசல்

தொடர் மழை காரணமாக செங்கல் உற்பத்தியில் ஈடுபட முடியாமல் காளவாசல்களை மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் காளவாசல் உரிமையாளர்கள். எப்போதும் மேகமூட்டம் சூழ்ந்து காணப்படுவதால் போதிய சூரிய ஒளி இல்லாமலும், விறகுகளும் மழையில் நனைந்து ஈரமாகி இருப்பதாலும், மழைக்கு முந்தைய காலங்களில் தயார் செய்த செங்கல்களை சூடேற்ற முடியாமல் பல ஆயிரம் செங்கல்கள் தேக்கம் அடைந்துள்ளன.

செங்கல் காளவாசல் தொழிலாளி

தொடர் மழை காரணமாக செங்கல் காளவாசல் கள் மூடப்பட்டுள்ளதால், காளவாசல் தொழிலையே நம்பி பிழைப்பு நடத்தும் தினசரி கூலி தொழிலாளர்கள் மிகவும் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

செங்கல் காளவாசல்

கடந்த ஒரு மாத காலமாகவே வேலை இல்லாமல் தவித்து வரும் தினசரி கூலி தொழிலாளர்கள் அன்றாடத் தேவைக்கு வெளியில் கடன் வாங்கி பிழைப்பு நடத்தும் சூழலுக்கு தள்ளப்பட்டு உள்ளதாக கூறுகின்றனர்.

செங்கல் காளவாசல்

செங்கல் காளவாசல்கள் இயங்க தேவைப்படும் மூலப் பொருளான செம்மண் எடுப்பதற்கு கடந்த மாதம் தான் மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்த நிலையில், மழை காரணமாக செங்கல் காளவாசல்களை இயக்க முடியாமல் போய் விட்டதாக கூறுகின்றனர் காளவாசல் உரிமையாளர்கள்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

உத்தம பாளையம் கோம்பை சுற்றுவட்டார பகுதிகளில் பெரும்பாலான காளவாசல்கள் மூடப்பட்டுள்ளதாகவும், மழை வெறிக்கும் சமயங்களில் மட்டும் தான் மீண்டும் காளவாசல்கள் இயங்கும் எனவும், செங்கல் தட்டுப்பட்டு மாவட்டம் முழுவதும் ஏற்பட்டுள்ளதால் மழைக்காலங்களில் கட்டிட தொழிலும் முடங்கியுள்ளதாகவும் கூறுகின்றனர் காளவாசல் உரிமையாளர்கள்

Published by:Arun
First published:

Tags: Local News, Theni