ஹோம் /தேனி /

குடியரசு தின விழாவையொட்டி பள்ளியில் கோலப்போட்டி  - வண்ணக் கோலங்கள் போட்டு அசத்திய மாணவிகள்

குடியரசு தின விழாவையொட்டி பள்ளியில் கோலப்போட்டி  - வண்ணக் கோலங்கள் போட்டு அசத்திய மாணவிகள்

X
கோலம்

கோலம் வரையும் மாணவிகள்

Theni | தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியிலுள்ள பள்ளியில் குடியரசு தினவிழாவை முன்னிட்டு கோலப்போட்டி நடத்தப்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகேகுடியரசு தின விழாவை முன்னிட்டு பள்ளியில் கோலப் போட்டி நடத்தப்பட்டதில்மாணவிகள் ஆர்வத்துடன்பங்கேற்றுவண்ண கோலங்கள் போட்டுஅசத்தினர்.

கோலப் போட்டி

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா மயிலாடும்பாறை கிராமத்தில் உள்ள ஜி.ஆர்.வி மேல்நிலைப் பள்ளியில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளி நிர்வாகம் சார்பில் குடியரசு தின விழாவை முன்னிட்டு மாணவ, மாணவிகளுக்கு கோல போட்டி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

பள்ளி நிர்வாகம் சார்பில் நடத்தப்பட்ட இந்த போட்டியில் 50க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர். கோலப் போட்டியில் பங்கேற்று கோலம் போடுவதற்காக அதிகாலையிலேயே மாணவிகள் பள்ளிக்கு வந்திருந்தனர்.

கோலம் வரையும் மாணவி

பள்ளி வளாகத்தில் கண்களை கவரும் வகையில் வண்ண வண்ண கோலமிட்டு அதில் கலர் சேர்க்கப்பட்ட உப்பு, பப்பாளி போன்றவற்றை தூவி அழகுபடுத்தினர். ஒவ்வொரு மாணவிகள் தன் திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக கோலமிட்டனர்.

Theni | பெரியகுளம் நகராட்சி கவுன்சிலர்களிடம் கடிந்துகொண்ட ஆட்சியர்

இந்த கோலங்களை பார்வையிட்ட ஆசிரியர் குழுவினர்கள் சிறப்பாக கோலம் போட்ட மூன்று மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினர். இந்த போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவிகளுக்கும் ஆறுதல் பரிசு வழங்கி பாராட்டினர்.

First published:

Tags: Local News, Theni