ஹோம் /தேனி /

கொலு பொம்மை உற்பத்தி குறைவு; விற்பனை அதிகம்- தேனியில் வியாபாரிகள் கவலை

கொலு பொம்மை உற்பத்தி குறைவு; விற்பனை அதிகம்- தேனியில் வியாபாரிகள் கவலை

தேனி

தேனி கொலு பொம்மைக் கடை

Theni | தேனியில் கொலு பொம்மைகள் உற்பத்தி குறைவாக உள்ளதால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Theni, India

கொலு பொம்மை விற்பனை அமோக நடைபெறும்போது உற்பத்தி குறைந்ததால் விற்பனையாளர்கள் கவலையடைந்துள்ளனர்.

நவராத்திரி பண்டிகை முன்னிட்டு வீடுகளிலும் கோயில்களிலும் கொலு பொம்மைகளை வைத்து வழிபடும் மக்கள், கொலு பொம்மைகளை வாங்க ஆர்வம் காட்டிவருகின்றனர். ஆனால், கொலு பொம்மை கடைகளில் இருப்பு இல்லாததால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.

நவராத்திரி பண்டிகை

இந்துக்களின் முக்கிய பண்டிகையான நவராத்திரி பண்டிகை பத்து நாட்கள் கொண்டாட கூடியதாகும். இந்த ஆண்டு நவராத்திரி பண்டிகை செப்டம்பர் 26 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 5ஆம் தேதி வரை நடைபெறுகிறது. நவராத்திரி பண்டிகையின் போது ஒவ்வொருவரும் வீட்டிலும் கொழு பொம்மைகளை வைத்து வழிபாடு நடத்துவர்.

கொலு பொம்மைகள்

தற்போது நவராத்திரி பண்டிகை தொடங்கி உள்ள நிலையில், தேனி மாவட்டத்தில் கொலு பொம்மைகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கொலு பொம்மை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கொலு பொம்மைகள்

கொலு பொம்மைகளை வைத்து, நவராத்திரி பண்டிகையின் போது

வழிபாடு செய்வதற்காக தேனி மாவட்டத்தில் சின்னமனூர், கம்பம் ஆகிய பகுதிகளில் கொலு பொம்மைகள் விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளது. கொரோனா பரவல் மற்றும் பொது மக்களிடையே இருந்த பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாகவே நவராத்திரி பண்டிகையின் போது கொலு பொம்மைகளை வாங்குவதற்கு மக்கள் தவிர்த்து வந்தனர்.

கொலு பொம்மைகள்

இந்த ஆண்டு பெரும்பாலும் பொதுமக்கள் பொருளாதார நெருக்கடியில் இருந்து வெளிவந்த நிலையில் நவராத்திரி பண்டிகைக்காக கொலு பொம்மைகளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கொலு பொம்மைகள்

இந்த ஆண்டு கொலு பொம்மைகள் விற்பனை ஆகுமோ ஆகாதோ என்று ஐயத்தில் கொலு பொம்மை உற்பத்தியாளர்கள் குறைந்த அளவிலான எண்ணிக்கையிலேயே பொம்மைகள் உற்பத்தி செய்ததால் இந்த ஆண்டு கொலு பொம்மைகளுக்கு தேவை ஏற்பட்டுள்ளதாக கடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தேவை அதிகரிப்பு

இதுகுறித்து கொலுபொம்மை வியாபாரிகள் கூறுகையில், ’நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு பலவகையான உருவ பொம்மைகளான துர்க்கை, ஏழுமலையான், கிருஷ்ணர், சரஸ்வதி விநாயகர், அம்மன் பொம்மைகள், சாய்பாபா, மீனாட்சி அம்மன், சரஸ்வதி, நரசிம்மன், ஆஞ்சநேயர், லட்சுமி, முருகன் என பல வண்ணங்களில் பல கடவுள் உருவ பொம்மைகள் விற்பனைக்கு வந்துள்ளன.

கொலு பொம்மைகள்

ஒவ்வொரு பொம்மைகளும் ஒவ்வொரு இதிகாச கதை சொல்வதாக உள்ளது. மேலும் குழந்தைகள் வரலாற்றைத் தெரிந்து கொள்ளும் விதமாகவும் இந்த நவராத்திரி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பண்டிகையில் ஒவ்வொருவரும் அவர்களுக்கு ஏற்றார் போல் சிலைகளை வாங்கி வழிபாடு செய்து வருகின்றனர்.

இந்த பண்டிகையில், வேண்டுதலுக்காக சிலை வாங்குபவர்களும் உள்ளனர். வேண்டுதலுக்காக சிலை வாங்குபவர்கள் திருமணம் நடக்க வேண்டும் என்றால், கிருஷ்ணன் அவதாரம் கொண்ட திருமண செட்டும், குழந்தை பெற வேண்டும் என்றால், தவழும் கிருஷ்ணர், வளைகாப்பு செட் போன்றவைகளை வாங்கி வழிபாடு செய்வர்.

கடந்த இரு ஆண்டுகளை ஒப்பிடும்போது இந்த ஆண்டு கொழு பொம்மையின் விற்பனை அமோகமாகவே உள்ளது. கொழு பொம்மைகளை வீட்டில் வைத்து வழிபடவும் கோயில்களில் கொலு பொம்மையை மொத்தமாக வைத்து வழிபடவும் மக்கள் ஆர்வம் கட்டுவதால் அதிகளவிலான மக்கள் கொலு பொம்மையை வாங்க வருகின்றனர்.

ஆனால் இந்த ஆண்டு கொலு பொம்மைகளின் உற்பத்தி குறைந்துள்ளதால் நாங்கள் ஆர்டர் செய்த அளவில் இருபது சதவீத பொருட்கள் மட்டுமே எங்களுக்கு கிடைத்தது. உற்பத்தியாளர் மற்றும் மொத்த விற்பனையாளர்கள் தற்போது சில்லறை வியாபாரிகளாக மாறிவிட்டனர். இருக்கும் கொலு பொம்மைகளை விற்பனை செய்துவிட்டு அடுத்த ஆண்டு முதல் உற்பத்தி செய்து கொள்ளலாம் என்ற முடிவில் வந்து விட்டனர். இதனால் தேனி மாவட்டத்தில் கொலு பொம்மைகளின் தேவை அதிகரித்துள்ளது’ என்று தெரிவித்தார்.

Published by:Karthick S
First published:

Tags: Local News, Theni