ஹோம் /தேனி /

தேனி மாவட்டத்தில் நாளை மாறுநாள் மின் தடை ஏற்படும் பகுதிகளை தெரிந்து கொள்ளுங்கள்

தேனி மாவட்டத்தில் நாளை மாறுநாள் மின் தடை ஏற்படும் பகுதிகளை தெரிந்து கொள்ளுங்கள்

மின்தடை பகுதிகள் அறிவிப்பு

மின்தடை பகுதிகள் அறிவிப்பு

Theni Power Cut | தேனி மாவட்டம்  பெரியகுளம் துணைமின் நிலையத்தில் நாளை மறுநாள் (சனிக் கிழமை) மின் தடை செய்யப்படும் பகுதிகள் பற்றிய விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டம் பெரியகுளம் துணைமின் நிலையத்தில் நாளை மறுநாள் (அக்டோபர் 29ம் தேதி) மின் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

தேனி மாவட்டம் பெரியகுளம் துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. ஆகையால் இந்த பகுதிகளில் நாளை மறுநாள் மின் தடை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அன்றைய தினம் மின்வாரியம் சார்பில்,உயர் அழுத்த மின் கம்பங்கள், போக்குவரத்துக்கு இடையூராக உள்ள மின் மாற்றிகளை அகற்றும் பணிகளைபணி நடக்க இருக்கிறது. மேலும், இதை சரிசெய்து பின்னர் சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

Must Read : பொள்ளாச்சி ‘சூர்யவம்சம்’ வீட்டில் ஷூட் செய்யப்பட்டு மாபெரும் ஹிட்கொடுத்த படங்களின் லிஸ்ட்!

இதனால், நாளை மறுநாள் பொது மக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதற்காக, காலை10 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்படும் என மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பெரியகுளம் வடகரை, மதுரை சாலை, அம்பேத்கா் சிலை, பழைய பேருந்து நிலையம், உள்ளிட்ட பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படுவதாக பெரியகுளம் மின் செயற்பொறியாளர் பாலபூமி தெரிவித்துள்ளார்.

Published by:Suresh V
First published:

Tags: Local News, Power cut, Power Shutdown, Theni