Home /theni /

பாட்டையா கோவிலும் காமய கவுண்டன்பட்டி வரலாறும்! - யார் இந்த காமய கவுண்டர்?

பாட்டையா கோவிலும் காமய கவுண்டன்பட்டி வரலாறும்! - யார் இந்த காமய கவுண்டர்?

கே.கே.பட்டி

கே.கே.பட்டி பாட்டையா கோவில்

KK Patti Kamaya Gounder | தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியில் அமைந்துள்ள காமயகவுண்டன்பட்டி ஊர் அமைவதற்கு காரணமாக இருந்த காமய கவுண்டர் மற்றும் பாட்டையா கோவில் பற்றி இந்த செய்தி தொகுப்பில் தெரிந்து கொள்ளலாம்..

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Theni, India
தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டத்திற்கு உட்பட்டு அமைந்துள்ளது காமயகவுண்டன்பட்டி பேரூராட்சி. நெல், திராட்சை விவசாயம், பெருமாள் கோயில், கருமாரியம்மன் கோயில்,சிறப்பு வழிபாட்டுத்தலங்கள் , காந்தி கோயில், என பல்வேறு சிறப்புகள் வாய்ந்த பகுதியாக விளங்குகிறது காமயகவுண்டன்பட்டி (எ) கே.கே.பட்டி..

ஐந்தாயிரத்திற்கும் மேலான மக்கள் வசிக்கும் பகுதியாக விளங்கும் கே.கே. பட்டி என்று அழைக்கப்படும் காமயகவுண்டன்பட்டி கிராமம் எவ்வாறு உருவானது என்பதை பற்றி சுருக்கமாக தெரிந்து கொள்ளலாம்.

1834 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் இருந்து காமய கவுண்டர் என்பவர் பூசாரி கவுண்டர் பட்டி பகுதியில் குடிபெயர்ந்துள்ளார் . அப்போதைய எரச நாயக்கனூர் ஜமீன் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட பகுதியான பூசாரி கவுண்டன் பட்டியில் இருந்து சுருளி தீர்த்தம் பகுதிக்கு மாடுகளை மேய்ப்பதற்காக சென்று வந்துள்ளார் காமய கவுண்டர். அவர் செல்லும் வழியில் முல்லை பெரியாற்றுப்பகுதி அமைந்துள்ளதால் அங்கு குடிபெயர்ந்து, அங்கு ஊர் பகுதியை உருவாக்கினால் மாடுகளுக்கு மேய்ச்சல் மற்றும் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யலாம் என்பதற்காக முல்லை பெரியாற்று கரையோரம் தனது தொழுவமாடுகளுடன் குடி பெயர்ந்து இருந்துள்ளார் காமய கவுண்டர். பின்னர் அந்த பகுதிக்கு அனைத்து சமுதாயத்தினரும் குடி பெயர்ந்து வந்துள்ளனர் .

கே.கே.பட்டி பாட்டையா கோவில்


பாட்டையா :-

அந்தப் பகுதிக்கு காமய கவுண்டரின் பெயரையே ஊர் பெயராக வைத்து காமயகவுண்டன்பட்டி என்று பொதுமக்கள் அழைத்து வந்துள்ளனர்.  மேலும் காமய கவுண்டரை அப்பகுதி மக்கள் பாட்டையா என அழைப்பதும் உண்டு. முன்கூட்டியே எதிர்காலத்தை கணிக்கும் தெய்வீக சக்தி காமய கவுண்டர் என்று அழைக்கப்படும் பாட்டையாவிற்கு இருந்ததாக பெரியோர்களால் கூறப்படுகிறது.

கே.கே.பட்டி பாட்டையா கோவில்


தன் இறுதி காலத்தை முன்கூட்டியே கணித்து தன்னுடைய மகனிடம் தெரிவித்து உள்ளார். அதன் பின் காமய கவுண்டன்பட்டி பகுதியில் வசித்த மக்களுக்கு தான தர்மங்கள் பல செய்து உயிர் நீத்துள்ளார் .

குழியில் சுரந்த பால்:

அவரை அடக்கம் செய்வதற்காக தோண்டப்பட்ட குழியில் இருந்து பால் சுரந்துள்ளது என்றும், அவரது உடல் அடக்கத்தினை தெய்வீக சக்தி உடைய பல சாதுக்கள் கண்டு களித்து மறைந்ததாகவும் பெரியோர்களால் கூறப்படுகிறது .  அவரது நினைவிடத்தை தற்போது பாட்டையா கோவிலாக கட்டி பொதுமக்கள் இன்றளவும் வழிபட்டு வருகின்றனர்.

கே.கே.பட்டி


உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

ஊரில் எந்த ஒரு நல்ல காரியம் நடந்தாலும் குடும்பத்தில் ஏதேனும் சுப காரியங்கள் நடைபெற்றாலும் முதலில் பாட்டையா கோவிலுக்கு சென்று பத்திரிக்கை வைத்தும் பூஜை செய்த பின்னரே சுப காரியங்களை நடத்துவதாக இன்றளவும் ஊர் பொதுமக்கள் கூறுகின்றனர். மேலும் ஊரில் ஏதேனும் அசம்பாவிதம் நடைபெற்றால் அனைத்தையும் பாட்டையா பார்த்துக் கொள்வார் இன்று பொதுமக்கள் கூறும் நடைமுறையும் உள்ளது
Published by:Arun
First published:

Tags: Local News, Theni

அடுத்த செய்தி