Home /theni /

Theni : கேரளாவில் வணிகர்கள் உண்ணாவிரதம் - தொடரும் பதற்ற நிலைக்கு காரணம் என்ன?

Theni : கேரளாவில் வணிகர்கள் உண்ணாவிரதம் - தொடரும் பதற்ற நிலைக்கு காரணம் என்ன?

தேனி

தேனி மாவட்டம்

Theni District : சுற்றுலா தலமான இடுக்கி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தேசிய பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு சரணாலயத்தை சுற்றியுள்ள ஒரு கிலோமீட்டர் பகுதிகளை சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலங்களாக (பஃபர்ஜோன்) அறிவிக்க நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

மேலும் படிக்கவும் ...
    வெப்பமயமாதலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து சூரியக்கதிர்கள் சுட்டெரித்து வரும் நிலையில், காடுகளின் பரப்பை அதிகரிக்க வேண்டும் என்று சர்வதேச நாடுகள் குரல் கொடுத்து வருகிறது.

    இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக உச்ச நீதிமன்றம், தேசிய பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு சரணாலயத்தை சுற்றியுள்ள ஒரு கிலோமீட்டர் பகுதிகளை சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலங்களாக (பஃபர்ஜோன்) அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வனத்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிட்டது.

    இந்த உத்தரவினால் கேரளாவில் மிகவும் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான தேக்கடி மற்றும் குமுளி பகுதிகளில் எந்த ஒரு கட்டுமான தொழிலையும் மேற்கொள்ளக்கூடாது என்றும் இருக்கும் கட்டிடங்களை பராமரிக்க கூடாது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளதால் சுற்றுலா பயணிகளை நம்பி உள்ள இடுக்கி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள், வணிகர்கள் மிகவும் பாதிக்கப்படுவர் இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த வணிகர்கள் கூறிவருகின்றனர்

    உச்சநீதிமன்றத்தின் சுற்றுச்சூழல் மண்டலப்பகுதி (பஃபர் ஜோன்) உத்தரவு இடுக்கி மாவட்ட மக்களை பாதிக்கும் எனவும் சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலங்கள் தொடர்பான உத்தரவை உச்சநீதிமன்றம் திரும்பப் பெறக்கோரி இடுக்கி மாவட்டத்தில் பல்வேறு போராட்டம் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று குமளி மண்டலக் குழுவின் தலைமையில் வணிகர்கள் மற்றும் தொழிலதிபர்கள் ஒருங்கிணைப்புக் குழு சார்பாக மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    இந்த உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துகொண்ட இடுக்கி மாவட்ட தொழில் அதிபர்கள் மற்றும் வணிகர்கள் ஊர்வலமாக வந்து குமுளி பேருந்து நிலையத்தில் காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இடுக்கி மாவட்டத்தில் சில தினங்களுக்கு முன்பு காங்கிரஸ் தலைமையிலான யுடிஎப் (ஐக்கிய ஜனநாயக கூட்டமைப்பினர்) முழு அடைப்பு போராட்டம் நடத்திய நிலையில், இன்று இடுக்கி மாவட்ட வணிகர்களும் குமுளி பகுதியில் உண்ணாவிரத போராட்டம் நடத்தியுள்ளனர்.

    உச்சநீதிமன்றம் உத்தரவினால் இடுக்கி மாவட்டத்தில் உள்ள குமுளி மற்றும் தேக்கடி பகுதிகளில் தொடர்ந்து வணிகர்களும் அரசியல் கட்சிகளும் போராட்டம் நடத்தி வருவதால் பதட்ட நிலை நிலவி வருவது குறிப்பிடத்தக்கது
    Published by:Arun
    First published:

    Tags: Kerala, Local News, Theni

    அடுத்த செய்தி