முகப்பு /தேனி /

கம்பத்தில் வீடு வாடகைக்கு எடுத்து போலி முத்திரைத்தாள், கள்ள நோட்டு அச்சடித்த கேரள நபர்கள்!

கம்பத்தில் வீடு வாடகைக்கு எடுத்து போலி முத்திரைத்தாள், கள்ள நோட்டு அச்சடித்த கேரள நபர்கள்!

X
கைது

கைது செய்யப்பட்டவர்கள்

Theni arrest | தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் போலியான முத்திரைத்தாள் மற்றும் கள்ள நோட்டு அச்சிட்ட கேரளாவைச் சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Theni Allinagaram, India

தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் போலியான முத்திரைத்தாள் மற்றும் கள்ள நோட்டு அச்சிட்ட கேரளாவைச் சேர்ந்த இரண்டு நபர்களை போலீசார் கைது செய்தனர்.

போலி முத்திரைத்தாள் :-

தேனி மாவட்டம் கம்பத்தை அடுத்தகம்பம்மெட்டு சாலை பதினெட்டாம் கால்வாய் அருகே, கம்பம் வடக்கு காவல் நிலைய காவல் ஆய்வாளர் சரவணகுமார் தலைமையில் சார்பு ஆய்வாளர் இளையராஜா, சிறப்பு சார்பு ஆய்வாளர் கண்ணதாசன் மற்றும்காவல்துறை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர் .

அப்போது சந்தேகம் படும் படியாக வந்த கேரள பதிவு எண் கொண்ட வாகனத்தை காவல்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அந்த வாகனத்தில் வந்த நபர்கள் காவல்துறை அதிகாரிகளுக்கு முன்னுக்கு பின் முரணான பதிலை அளித்துள்ளனர். காரில் வந்தவர்கள் கேரள மாநிலம் மொன்டிஎருமையில் பத்திரப்பதிவு அலுவலகம் வைத்திருப்பதாக கூறி, 5000 மதிப்புடையமுத்திரைத்தாள்களை காவல்துறை அதிகாரிகளிடம் காட்டியுள்ளனர்.

அதனை சோதனை செய்த போலீசார் அவை போலி முத்திரைத்தாள் என கண்டறிந்து, அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.அவர்களின் நடத்தையில் சந்தேகப்பட்ட காவல்துறை அதிகாரிகள், மேலும் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர்கள் போலி முத்திரைத்தாள்கள் தயாரித்து விற்பனை செய்து தெரிய வந்தது .

போலீசாரின் விசாரணையில் காரில் வந்த இரு நபர்கள், இடுக்கி மாவட்டம் பாரத்தோடு கிராமத்தை சேர்ந்த 41 வயதாகும் முகமது சியாது மற்றும் இடுக்கி மாவட்டம் சிரட்ட வேலில் பகுதியைச் சேர்ந்த 36 வயதாகும் பிபின் தாமஸ் என்பது தெரிய வந்தது.

இவர்கள் கம்பம் பகுதியில் உள்ள 15 ஆவது வார்டு ஓடக்கரை தெருவில் உள்ள கோபி கிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான வீட்டினை வாடகைக்கு எடுத்து, அந்த வீட்டில் போலி முத்திரைத்தாள்கள் மற்றும் கள்ள நோட்டுகளை அச்சிட்டு புலக்கத்தில் விட்டது விசாரணையில் தெரியவந்தது .

இவர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில் காவல்துறை அதிகாரிகள் முத்திரைத்தாள்கள் போலியாக அச்சடிக்க பயன்படுத்திய இடத்திற்கு சென்று அங்குள்ள பொருள்களை கையகப்படுத்தி உள்ளனர்.

அங்கே, ரூ. 5000 மதிப்பு உள்ள 4 முத்திரைத்தாள், 1000 மதிப்பு உள்ள 4 முத்திரைத்தாள், 100மதிப்பு உள்ள 3 முத்திரைத்தாள், பின்பக்கம் மட்டும் அச்சிடப்பட்ட வெட்டப்படாத 500 ரூபாய் தாள் அடங்கிய ஏ4 சீட் 1, முத்திரைத்தாள் அச்சடிக்க பயன்படுத்தப்பட்ட கேனான் பிரிண்டர், மகேந்திரா கார் உள்ளிட்டவற்றைகாவல்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து , இரண்டு நபர்களையும் காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

First published:

Tags: Fake Note, Local News, Theni