முகப்பு /தேனி /

"கண்ணகி கோயில் கட்டினால் சபரிமலை வருமானம் குறையும்" கண்ணகி கோயிலுக்கு கடும் எதிர்ப்பு!

"கண்ணகி கோயில் கட்டினால் சபரிமலை வருமானம் குறையும்" கண்ணகி கோயிலுக்கு கடும் எதிர்ப்பு!

X
கண்ணகி

கண்ணகி கோயில் - சபரிமலை

Theni kannagi temple | தமிழக - கேரள எல்லையில் அமைந்துள்ள மங்கலதேவி கண்ணகி கோயில் சித்திரை முழு நிலவு விழா நடைபெறவுள்ளது.

  • Last Updated :
  • Theni Allinagaram, India

தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள மங்களதேவி கண்ணகி கோயில் சித்திரை முழு நிலவு விழா நடைபெறவுள்ளதை முன்னிட்டு, கண்ணகி அறக்கட்டளை சார்பாக கலந்த ஆலோசனைக் கூட்டம் கம்பம் பகுதியில் நடைபெற்றது. சபரிமலையில் வருமானம் குறைந்து விடும் என்பதற்காக கண்ணகி கோயில் கட்டுவதற்கு கேரள அரசு தடையாக உள்ளதாக அறக்கட்டளை நிர்வாகிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கண்ணகி கோயில் திருவிழா:-

தேனி மாவட்டம் லோயர்கேம்ப் அருகே, தமிழக-கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ள மங்களதேவி கண்ணகி கோவில் சித்திரை முழு நிலவு திருவிழா நடைபெற உள்ள நிலையில் , முன் ஏற்பாடு செய்வது குறித்த ஆலோசனை கூட்டம் கண்ணகி அறக்கட்டளை நிர்வாகிகள் சார்பில் கம்பம் பகுதியில் நடைபெற்றது.

தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உள்ள கோசேந்திர ஓடை அருகில் அமைந்துள்ள கண்ணகி மண்டபத்தில் கண்ணகி கோவில் சித்திரை முழு நிலவு விழா தொடர்பாகவும் திருவிழாவிற்கான கொடியேற்றம் தொடர்பாகவும் கண்ணகி அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் இடையேயான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

மே 5ஆம் தேதி கண்ணகி கோவில் சித்திரை முழு நிலவு விழா நடைபெறுவதை ஒட்டி, தேக்கடி மூங்கில் தோப்பு கூட்டரங்கில், இரு மாநில அதிகாரிகளிடையே ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

ஆலோசனை கூட்டம் :-

இந்த கூட்டத்தில் திருவிழாவிற்கு தேவையான முன்னேற்பாடு நடவடிக்கைகளை குறித்தும், பக்தர்களுக்கு தேவையான போக்குவரத்து வசதிகள், உணவு மற்றும் குடிநீர் வசதிகள், பாதுகாப்பு வசதிகள் உள்ளிட்ட அனைத்து அம்சங்கள் குறித்தும் கலந்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தின் முடிவில் கண்ணகி கோயில் தொடர்பான கட்டுப்பாடுகள் குறித்து மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது.

இந்த அறிவிப்பு பற்றியும், கோயில் சித்திரை முழு நிலவு திருவிழா நடைபெறுவதற்கான கொடியேற்றம் பளியங்குடியில் நடைபெறுவது தொடர்பாகவும் கண்ணகி அறக்கட்டளை நிர்வாகிகள் சார்பில் கலந்து ஆலோசனை செய்யப்பட்டது.

மேலும் கண்ணகி கோயில் கொடியேற்றம் பழியங்குடியில் 23.4.23 அன்று நடைபெற நிலையில் , கொடியேற்றம் நிகழ்வுக்கு தேவையான முன்னேற்பாடுகள் குறித்தும் கலந்து ஆலோசனை செய்யப்பட்டது.

இதையும் படிங்க | கம்பம் கௌமாரியம்மன் கோயில் கொடிமரம் ஏற்றும் நிகழ்வு.. பக்தர்கள் வெள்ளத்தில் நிறைந்த கோயில்..

தொடரும் கட்டுப்பாடுகள் :-

மேலும் இந்த கூட்டத்தில் பேசியது குறித்து மங்களதேவி கண்ணகி அறக்கட்டளை செயலாளரான ராஜ கணேசன் கூறுகையில் , \" எங்களது அறக்கட்டளை 40 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது . கண்ணகி கோவில் தொடர்பாக தொடர்ந்து போராடி வருகிறோம். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவது பக்தர்களை பாதுகாப்பான முறையில் அழைத்து செல்வது உள்ளிட்ட பணிகளை செய்து வருகிறோம். கண்ணகி கோயில் தமிழக கேரளா எல்லைப் பகுதியில் அமைந்துள்ளதால் இரு மாநிலங்களும் சேர்ந்து வணங்க வேண்டும் என உத்தரவு உள்ளது. கேரளாவில் இருந்து கண்ணகி கோயிலுக்கு நான்கு சக்கர வாகனம் செல்லும் அளவிற்கான சாலை வழி உள்ளதால் கோயிலை கேரளா அரசு உரிமை கொண்டாடுகிறது.

கண்ணகி கோயிலுக்கு தமிழக வழி பாதை அமைக்க வேண்டும் என்பது எங்களது கோரிக்கையாக உள்ளது. மேலும் சபரிமலையில் வருமானம் குறைந்து விடும் என்பதால் , கேரள அரசு கண்ணகி கோவிலை கட்டுவதற்கு தொடர்ந்து இடையூறு செய்து வருகிறது. புலிகள் சரணாலயத்தில் கண்ணகி கோவில் இருப்பதால் கட்டுப்பாடு விதிக்கப்படுவதாக கேரளா அரசு கூறுகிறது. அதே புலிகள் சரணாலயத்தில் உள்ள சபரிமலையில் எந்த கட்டுப்பாடுகளும் இல்லை . எப்போது வேண்டுமானாலும் சாமி தரிசனம் செய்யலாம். ஆனால் கண்ணகி கோயிலில் வருடத்திற்கு ஒரே ஒரு நாள் அதுவும் 8 மணி நேரம் மட்டுமே சாமி தரிசனம் செய்ய முடியும். சபரிமலையில் போட்டோ எடுப்பதற்கு அனுமதி உண்டு ஆனால் கண்ணகி கோயிலில் அனுமதி இல்லை . ஊடகவியலாளர்களும் பெரும் போராட்டத்திற்கு பின்னரே ஒவ்வொரு ஆண்டும் கண்ணகி கோவிலுக்கு சென்று வருகின்றனர்.

இரு மாநில எல்லையில் கண்ணகி கோயில் அமைந்துள்ளதால் ஆலோசனைக் கூட்டம் தேனி மற்றும் இடுக்கி மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் நடைபெறுவது வழக்கம் . இரு மாநில கூட்டம் என்பது ஒரு ஆண்டு தமிழகத்திலும் ஒரு ஆண்டு கேரளாவிலும் நடைபெற வேண்டும். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் கேரளாவில் ஆலோசனை கூட்டம் நடைபெறுவதால் கேரளா அதிகாரிகள் அதிகம் கட்டுப்பாடுகளை விதிக்கின்றனர். கேரளாவில் கூட்டம் நடைபெறுவதால் தமிழக அதிகாரிகள் கேரள அதிகாரிகளின் பேச்சுகளை கேட்க வேண்டி உள்ளதாகவும்  அறக்கட்டளை நிர்வாகிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Local News, Sabarimalai Ayyappan temple, Theni