தேனி மாவட்டம் காமயகவுண்டன்பட்டியில் உள்ள தென்திருவேற்காடு என அழைக்கப்படும் ஸ்ரீ கருமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழாவில், வேல் அலகு குத்தியும், பலர் தீச்சட்டி எடுத்தும், பூக்குழி இறங்கியும் ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டியில் அமைந்துள்ளது ஸ்ரீ கருமாரி அம்மன் கோவில். இந்த கோவிலில் பங்குனி திருவிழா வருடந்தோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.
பங்குனி மாதம் முதல் செவ்வாயில் கொடியேற்றப்பட்டு, இரண்டாம் செவ்வாய்கிழமையான இன்று அலகு குத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த வருடம் ஸ்ரீகருமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்ற உள்ளது. 5 நாட்கள் நடைபெறும் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி, நடைபெற்றது.
ஏராளமான பக்தர்கள் முல்லைப்பொரியாறு ஆற்றங்கரையில் இருந்து தீச்சட்டி, பால்குடம் மற்றும் வேல் அலகு குத்தியும் ஊரின் முக்கிய விதிகளில் ஊர்வலமாக வருகின்றனர்
இன்று காலை வேல் பூட்டுதல் பால்குடம் எடுத்தல் , அழகு குத்தி பூக்குழி இறங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது . அதேபோல இன்று இரவு பள்ளி மாணவ மாணவிகளின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது .
<strong>உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற <a href="https://www.youtube.com/channel/UCgSkbmwaB-iVtyW3f0nL3Cg?sub_confirmation=1">கிளிக் </a>செய்க</strong>
திருவிழாவில் நாளை பொங்கல் வைத்துள்ள நிகழ்ச்சி ஆடல் பாடல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அடுத்தடுத்த நாட்களில் அம்மன் தேர் பவானி வருதல் முளைப்பாரி எடுத்தல் மஞ்சள் நீராட்டு விழா சிறப்பு அபிஷேகம் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது .
இன்றைய நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்தும் 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் வேல் அலகு குத்தியும் ஊர்வலமாக சென்றனர்.
பின்னர் கோவில் முன்பு ஏற்பாடு செய்திருந்த பூக்குழியில் ஏராளமான பக்தர்கள் இறங்கி தீ மிதித்து அம்மனுக்கு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினார்கள்.
பக்தர்கள் பரவசம் பெங்க ஓம்சக்தி... பராசக்தி... எனும் பக்தி கோஷங்களை எழுப்பி வழிபட்டனர். அதைத்தொடர்ந்து அம்மனுக்கு சிறப்புப் அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகளை நடத்தினார்கள்.
இந்த கோயிலுக்கு உத்தமபாளையம், கம்பம், கூடலூர், காமயகவுண்டன்பட்டி, சுருளிப்பட்டி, அணைப்பட்டி உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து அம்மனை வழிபட்டுச் சென்றனர்.
திருவிழாவில் ஆயிரக்கணக்காண பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கோயிலுக்கு தொடர்ந்து கூட்டம் அதிகரித்து வருவதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Theni