தேனி மாவட்டம் தேவதானப்பட்டி முருகமலை பரமேஸ்வரன் கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா நடந்தது. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்தனர்.
தேவதானப்பட்டி முருகமலை பரமேஸ்வரன் கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.
கடந்தாண்டு கொரோனா காரணமாக பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
முருகமலை பரமேஸ்வரன் கோவிலில் சாமிக்கு சிறப்பு அபிசேகம் செய்து பரணி தீபம் ஏற்றப்பட்டது. மாலை சரியாக 5.55 மணிக்கு திருக்கோயில் வழிபாட்டு முறைப்படி சிறப்பு பூஜை செய்து கிராம சூடக்குடம் மற்றும் மூங்கிலணை காமாட்சியம்மன் கோவிலில் இருந்து பெறப்பட்ட நெய் மற்றும் உபயதாரர்கள் மூலமாக பெறப்பட்ட எண்ணை ஆகியவை கொண்டு கொப்பரைகளில் திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
விழாவில் கலந்துகொண்ட பக்தர்கள் அனைவருக்கும் தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. திருவிழா ஏற்பாடுகளை திருக்கோயில் பரம்பரை நிர்வாக அறங்காவலர் அருணாசேகர் செய்திருந்தார்.
Must Read : ராமநாதபுரம் சென்றால் இந்த இடத்திற்குப் போக தவறாதீங்க - பிரமிப்பூட்டும் அரண்மனை!
திருவிழாவிற்கான பாதுகாப்பு பணியினை தேவதானப்பட்டி போலீசார் மற்றும் வனச்சரக அதிகாரிகளும் செய்தனர். தேவதானப்பட்டி பேரூராட்சி துப்பரவு மற்றும் சுகாதார பணி செய்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Karthigai Deepam, Local News, Theni