தேனி அல்லிநகரத்தில் உள்ள தனியார் திருமண மஹாலில் தேனி முல்லைப் பெரியாறு முத்தமிழ் மன்றம் மிஸ்ரா இலக்கியப் பேரவை சார்பில் மங்களதேவி கண்ணகி சித்ரா பௌர்ணமி விழா நடைபெற்றது. தனியார் நிறுவனத்தின் நிறுவன தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் உப்புக்கோட்டை பச்சையப்பா கல்வி குழுமங்களின் நிறுவன தலைவர் லட்சுமி வாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த விழாவில் தேசிய செட்டியார் பேரவையின் நிறுவன தலைவர் ஜெகனாத் மிஸ்ரா பங்கேற்று கண்ணகியின் திருவுருவபடத்தை திறந்து வைத்து 100க்கும் மேற்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில், “சித்திரா பௌர்ணமியினை முன்னிட்டு நடைபெறும் கண்ணகி கோவில் திருவிழாவில் இந்திய முழுவதும் வருகைபுரியும் மக்களை தேனி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சிறப்பான முறையில் வரவேற்பு அளிப்பார்கள் என்றும், தமிழக அரசு சார்பிலிலும் பல்வேறு ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டு வருகின்றன” என்று அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், “தமிழக பகுதியில் உள்ள கண்ணகி கோவிலினை தரிசனம் செய்வதற்காக தமிழகத்தில் இருந்து செல்லும் மக்கள் கேரளா பகுதி வழியாக செல்ல இருப்பதால் நமக்காக உரிமையினை தமிழக அரசு தலையிட்டு பெற்றுத் தர வேண்டும் என்றும், தேசிய செட்டியார் பேரவை சார்பாக லோயர் கேம்பில் கண்ணகி கோட்டம் அமைக்கப்படும்” என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் பேராசிரியர் பத்மினி பாலா, தேனி மாவட்ட வழக்கறிஞர் பிரிவு முருகன் ஆகியோர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியினை தேசிய செட்டியார் பேரவையின் தேனி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் பங்கேற்று ஒருங்கிணைப்பு செய்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் கிராமிய கலைஞர்கள், பெண்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Theni