தமிழக கேரள எல்லையில் அமைந்துள்ள கண்ணகி கோவிலில் சித்திரை முழுநிலவு திருவிழா நடத்துவது தொடர்பான இரு மாநில அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தின் முடிவில் கடந்த ஆண்டுகளை விட பக்தர்கள் வனப் பகுதியில் உள்ள கண்ணகி கோவிலுக்கு சென்று வர கூடுதலாக ஒரு மணி நேரம் ஒதுக்கியுள்ளதாக இரு மாவட்ட ஆட்சியர்களும் தெரிவித்தனர். மேலும் கண்ணகி கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு எடுக்கப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து தேனி மாவட்ட ஆட்சியர் கூறுவதை இந்த தொகுப்பில் காணலாம்.
கண்ணகி கோயில் திருவிழா :-
தேனி மாவட்டம் தமிழக கேரள எல்லைப் பகுதியான லோயர் கேம்ப் அருகே உள்ள மங்கலதேவி கண்ணகி கோவில் சித்திரை முழுநிலவு விழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம் .
தமிழக கேரள எல்லைப் பகுதியில் இக்கோவில் அமைந்துள்ளதால் கோவில் திருவிழா நடைபெற முன் ஏற்பாடு செய்வது குறித்த ஆலோசனை கூட்டம் கண்ணகி அறக்கட்டளை நிர்வாகிகள் தேனி மற்றும் இடுக்கி மாவட்ட ஆட்சியர்கள், இரு மாநில வனத்துறை அதிகாரிகள் உட்பட பல அதிகாரிகள் கலந்து கொண்டு ஆலோசனைக் கூட்டம் நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் வரும் மே 5 ஆம் தேதி கண்ணகி கோவில் சித்திரை முழு நிலவு விழா நடைபெறுவதை ஒட்டி, தேக்கடி மூங்கில் தோப்பு கூட்டரங்கில் இரு மாநில அதிகாரிகளிடையே ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் தேனி மாவட்ட ஆட்சி தலைவர் ஷஜீவனா தலைமையில் இடுக்கி மாவட்ட ஆட்சித்தலைவர் ஷீபா ஜார்ஜ் முன்னிலையில் இரு மாநில அதிகாரிகள் மற்றும் கண்ணகி கோவில் அறக்கட்டளையை சேர்ந்தவர்கள் உடனான ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் இரு மாநில ஆட்சியர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து தெரிவித்தனர்.
கட்டுப்பாடுகள் & முன்னேற்பாடுகள் :-
அதன்படி, கோவிலுக்கு பக்தர்கள் சென்று வர கூடுதலாக ஒரு மணி நேரம் வழங்கியுள்ளதாகவும், மலைப்பகுதியில் செல்ல தகுதியான நான்கு சக்கர இயக்க வாகனங்களுக்கு தரச் சான்றிதழ் மற்றும் உரிமைச் சான்றிதழ் மே இரண்டாம் தேதி தொடங்கி நான்காம் தேதி 5 மணி வரை நடைபெறும் எனவும், அதில் ஜீப் வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை காண்பித்து சான்றிதழ்களை பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் கோவிலுக்கு சென்று வர அனுமதிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
அனுமதி சான்று பெற்ற வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி:
கொரோனா பரவல் இருக்கும் நிலையில்,தமிழ்நாடு பகுதியான பளியன்குடி வழிச்சாலையில் சிறப்பு அதிகப்படியான மருத்துவ முகாம்கள் அமைக்கப்படும் எனவும், வனப்பகுதியில் கோவில் அமைந்திருப்பதால் பிளாஸ்டிக் பொருட்கள், பட்டாசு பொருட்கள் மற்றும் புகையிலை பொருட்களை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும் கலெக்டர் தெரிவித்தார்.
அனுமதிக்கப்பட்ட நபர்களை தவிர மற்ற நபர்கள் கேமரா போன்ற பொருட்கள் கொண்டு செல்ல தடைஇருப்பதாகவும், அதிக ஒலி எழுப்பக்கூடிய ஸ்பீக்கர் கொண்டு தடை இருப்பதாகவும் கூறிய ஆட்சியர்,மாவட்ட நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட நபர்களை தவிர மற்ற நபர்கள் கேமரா மற்றும் புகைப்படக் எடுத்து செல்ல கட்டுப்பாடு இருப்பதாக தெரிவித்தார்.
கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு, கோவிலுக்கு சென்று வரும்பக்தர்களுக்கு கூடுதலாக கழிப்பறைகள் அமைக்கப்பட இருப்பதாகவும், இதுவரை கோயிலில் நடைபெற்ற பூஜை முறைகளேஇந்த ஆண்டு நடைபெறும் எனவும், குடிநீர், சுகாதாரம் பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்ட மக்களுக்கு தேவைப்படும் அடிப்படை தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்படும் எனவும் தேனி மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Temple, Theni