முகப்பு /தேனி /

கம்பத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ரத்ததான முகாம்!

கம்பத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ரத்ததான முகாம்!

X
இரத்த

இரத்த தான முகாம் 

Theni blood donation camp | தேனி மாவட்டம் கம்பம் நகரின் சிக்னல் அருகே தேனி அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரி மற்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ரத்ததான முகாம் நடத்தப்பட்டது. 

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Theni Allinagaram | Kambam (Cumbum)

தேனி மாவட்டம் கம்பம் நகரின் சிக்னல் அருகே தேனி அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரி மற்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ரத்ததான முகாம் நடத்தப்பட்டது.

ரத்ததான முகாம் :-

தேனி மாவட்டம் கம்பம் நகரில் தேனி அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரி மற்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ரத்ததான முகாம் நடத்தப்பட்டது . கம்பம் சிக்னல் அருகே முகாம் அமைக்கப்பட்டு பொதுமக்கள் மற்றும் தன்னார்வர்கள் ரத்ததானம் வழங்கும் நிகழ்வு மாவட்ட தலைவர் நிஜாமுதீன் தலைமையில் நடைபெற்றது.

தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கி பிரிவு மருத்துவர் ஆர்.ஹனுமந்த்ராவ் தலைமையிலான மருததுவக்குழுவினர் பொதுமக்களிடம் ரத்தம் சேகரித்தனர்.

ஏராளமான இளைஞர்கள் மற்றும் பெண்கள் ஆர்வமாக முன் வந்து ரத்ததானம் செய்தனர். ரத்ததானம் வழங்கியவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ரத்த விருத்தி உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது. முகாமிற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கம்பம் கிளை நிர்வாகிகள் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

First published:

Tags: Blood Donation, Local News, Theni