முகப்பு /தேனி /

கோம்பையில் களைக்கட்டிய காளியம்மன் கோயில் சித்திரை திருவிழா!

கோம்பையில் களைக்கட்டிய காளியம்மன் கோயில் சித்திரை திருவிழா!

X
கோம்பையில்

கோம்பையில் களைக்கட்டிய காளியம்மன் கோயில் சித்திரை திருவிழா

kaliyamman temple chithirai festival in kombai | தேனி மாவட்டம் கோம்பை பகுதியில் அமைந்துள்ள மிகவும் புகழ்பெற்ற மாரியம்மன் மற்றும் காளியம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் ஏராளமான பெண்கள் முளைப்பாரி எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். 

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள கோம்பை பேரூராட்சியில் வசிக்கும் பொதுமக்கள் ஸ்ரீமாரியம்மன் மற்றும் காளியம்மன் கோவிலில் நாள்தோறும் இறை வழிபாடு நடத்தி வருகின்றனர். அந்த அம்மன் திருக்கோவில்களில் வருடம் தோறும் சித்திரை மாத திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில், இந்த வருட சித்திரை திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. சித்திரை திருவிழாவில் ஆயிரக்கணக்கான பெண் பக்தர்கள் விரதம் இருந்து காப்பு கட்டியதுடன் மழை வளம் பெற வேண்டி முளைப்பாரி வளர்த்து வந்தனர்.

கோம்பையில் களைக்கட்டிய காளியம்மன் கோயில் சித்திரை திருவிழா

சித்திரை திருவிழாவின் நிறைவு விழாவாக ஊரின் முக்கிய வீதிகளில் அம்மன் கரகத்துடன் முளைப்பாரியினை தலையில் சுமந்து ஊர்வலமாக வந்த ஆயிரக்கணக்கான பெண் பக்தர்கள் அம்மன் கோவிலில் வைத்து இறை வழிபாடு மற்றும் விசேஷ பூஜைகளை நடத்தி ஊரின் விவசாய ஆதாரமான புது குளத்தில் முளைப்பாரியினை கரைத்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை காளியம்மன் மற்றும் மாரியம்மன் கோவில் விழா கமிட்டியினர் பொதுமக்களுடன் ஒன்றினைந்து செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Local News, Theni