முகப்பு /தேனி /

Theni | ஆட்டோ மீது ஜேசிபி வாகனம் மோதி விபத்து - ஆட்டோ ஓட்டுனர் படுகாயம்

Theni | ஆட்டோ மீது ஜேசிபி வாகனம் மோதி விபத்து - ஆட்டோ ஓட்டுனர் படுகாயம்

X
தேனி

தேனி ஜேசிபி

Theni | உத்தமபாளையம் அருகே உள்ள கார்க்கில்சிக்கயன்பட்டியில் ஆட்டோ மீது ஜேசிபிவாகனம் மோதிய விபத்தில் அதிர்ஷ்டவசமாக ஆட்டோ ஓட்டுனர் காயங்களுடன் உயிர் தப்பினார். 

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள கார்க்கில் சிக்கயன்பட்டியில் ஆட்டோ மீது ஜேசிபி வாகனம் மோதிய விபத்தில் அதிர்ஷ்டவசமாக ஆட்டோ ஓட்டுனர் காயங்களுடன் உயிர்த் தப்பினார்.

சாலை விபத்து

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள கார்க்கில் சிக்கியன்பட்டி பகுதியில் அமைந்துள்ள பெட்ரோல் பங்க் அருகே மதுரை கூட்டு குடிநீர் திட்டத்திற்காக பைப் லைன் பதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஜேசிபி வாகனம் மீது ஆட்டோ மோதி விபத்து ஏற்பட்டது .

திண்டுக்கல் குமுளி தேசிய நெடுஞ்சாலையில் கம்பத்திலிருந்து

உத்தமபாளையம் நோக்கி ஆட்டோ ஒன்று வந்து கொண்டிருந்தது. மதுரை கூட்டுக் குடிநீர் திட்ட பணிகளுக்காக பைப் லைன் அமைக்கும் பணி நடைபெற்று வந்த நிலையில் , பணியில் இருந்த ஜேசிபி வாகனம் சாலை ஓரத்தில் இருந்து சாலைக்கு வந்துள்ளது . அப்போது எதிர்பாராத விதமாக ஜேசிபி வாகனம், ஆட்டோ மீது மோதியதில் ஆட்டோ கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் படுகாயம் அடைந்தார். படுகாயம் அடைந்த ஆட்டோ ஓட்டுநரை அருகில் இருந்தவர்கள் மீட்டு விபத்து குறித்து உத்தமபாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த வரை உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்தில் படுகாயம் அடைந்தவர் மயக்க நிலையில் இருந்ததால் அவர் குறித்த விவரங்கள் பற்றி விசாரணை செய்து வருவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் இந்த விபத்து எவ்வாறு நடைபெற்றது என்பது குறித்து உத்தமபாளையம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை கூட்டுக் குடிநீர் திட்ட பணிகள் தேனி மாவட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் நிலையில் இந்தப் பணிகளால் வாகன விபத்து அதிகமாக ஏற்பட்ட வண்ணம் உள்ளது.

வெடிகுண்டை கண்டுபிடிக்க போய் கறிக்குழம்பை மோப்பம் பிடித்த நாய்.. டென்ஷன் ஆன திருச்சி போலீசார்..

முறையான பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி மதுரை கூட்டுக் குடிநீர் திட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.

First published:

Tags: Local News, Theni