முகப்பு /தேனி /

தேனி பல்லவராயன்பட்டியில் அணல் பறக்கும் ஜல்லிக்கட்டு போட்டி... 700 மாடுகள் பங்கேற்பு..

தேனி பல்லவராயன்பட்டியில் அணல் பறக்கும் ஜல்லிக்கட்டு போட்டி... 700 மாடுகள் பங்கேற்பு..

X
தேனி

தேனி பல்லவராயன்பட்டிஜல்லிக்கட்டு 2023

Theni Pallavarayanpatti Jallikattu 2023 : தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள பல்லவராயன்பட்டி கிராமத்தில் ஸ்ரீ வல்லடிகாரசுவாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Theni Allinagaram | Theni

தேனி மாவட்டத்தில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பல்லவராயன் பட்டியில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் 700 மாடுகள், 400 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.

பல்லவராயன்பட்டிஜல்லிக்கட்டு :-

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள பல்லவராயன் பட்டியில் ஸ்ரீ வல்லடிகாரசுவாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்று வருகிறது. கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த இந்த ஜல்லிக்கட்டு போட்டி இன்று துவங்கி நடைபெற்று வருகிறது.

கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன் தலைமையிலும் தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா, மாவட்ட கண்காணிப்பாளர் டோங்ரே பிரவீன் உமேஷ் முன்னிலையிலும் இந்த ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகரன் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு ஜல்லிக்கட்டு போட்டியை கண்டு களித்தனர்.

2 ஆண்டுகளுக்கு பின் ஜல்லிக்கட்டு:

காலை 7 மணி அளவில் துவங்கிய ஜல்லிக்கட்டு போட்டியில் 400க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர் ஒரு சுற்றுக்கு 50 வீரர்கள் என மொத்தம் 8 சுற்றுகளாக போட்டி நடைபெற்றது.இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பாதுகாப்பு பணிக்காக 750 காவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

தேனி பல்லவராயன்பட்டி ஜல்லிக்கட்டு..

தேனி மாவட்டத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் இந்த முதல் ஜல்லிக்கட்டு போட்டியை காண ஏராளமான பொதுமக்கள் வருகை புரிந்து போட்டியை கண்டுகளித்து வருகின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

கார் - பைக் பரிசு:

இந்த போட்டியில் கலந்து கொள்ளும் அனைத்து மாடுகளுக்கும் சில்வர் அண்டா பரிசாக வழங்கப்பட்டது. ஜல்லிக்கட்டு போட்டியில் அதிக மாடு அடக்கிய வீரர்களுக்கு சிறப்பு பரிசாக 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான மாருதி ஆல்டோ கார் வழங்கப்பட உள்ளது சிறந்த இரண்டு மாடுகளுக்கு டிவிஎஸ் பைக் எலக்ட்ரிக் பைக் வழங்கப்பட உள்ளது. தங்க காசு வெள்ளி காசு குத்துவிளக்கு பீரோ எல்இடி டிவி டைனிங் டேபிள் உள்ளிட்ட பொருள்களும் ஜல்லிக்கட்டு போட்டியில் வழங்கப்பட உள்ளது

First published:

Tags: Jallikattu, Local News, Theni