ஹோம் /தேனி /

ஜல் ஜீவன் திட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் - தேனி கலெக்டர்

ஜல் ஜீவன் திட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் - தேனி கலெக்டர்

தேனி கலெக்டர்

தேனி கலெக்டர்

Theni District | ஜல் ஜீவன் குடிநீர் திட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றப்பட்டு வெற்றிகரமாக செயல்படுத்துவது அரசின் நோக்கம் என தேனி மாவட்ட கலெக்டர் முரளீதரன் தெரிவித்துள்ளார். 

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Theni, India

ஜல் ஜீவன் குடிநீர் திட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றப்பட்டு வெற்றிகரமாக செயல்படுத்துவது அரசின் நோக்கம் என்று தேனி மாவட்ட கலெக்டர் முரளீதரன் தெரிவித்துள்ளார்.

2021-22ம் நிதியாண்டில் 26,940 கோடி ரூபாய் மாநிலங்களுக்கு 15வது நிதி குழுவின் பரிந்துரையின்படி கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளுக்கு தண்ணீர் மற்றும் சுகாதாரத்திற்காக மானியமாக ஒதுக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஐந்தாண்டுகளுக்கு அதாவது 2025-26ம் ஆண்டு வரை ரூ.1,42,084 கோடி நிதிஉதவி வழங்க உறுதியளிக்கப்பட்டுள்ளது. இது போன்ற முதலீடுகள் மூலம் நாடு முழுவதும் உள்ள கிராமப்புறங்களில், பொருளாதார நடவடிக்கைகளை துரிதப்படுத்தி கிராமப்புற பொருளாதாரம் மேம்படுத்தப்படுகிறது. அத்துடன் கிராமங்களில் வேலை வாய்ப்புக்களையும் உருவாக்குகிறது.

இதையும் படிங்க : தேனி மாவட்டத்தின் அருமை, பெருமைகளை கூறும் அருங்காட்சியகம்.! இங்கு இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா..!

முந்தைய தண்ணீர் விநியோக திட்டங்களில் இருந்து ஒரு முன்னுதாரணமாக, ஜல் ஜீவன் திட்டம் தண்ணீர் விநியோகத்திற்கான உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள், தண்ணீர் விநியோகம் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. எவரையும் விட்டுவிடாமல் சுத்தமான குடிநீர் வழங்குவதே ஜல் ஜீவன் திட்டத்தின் குறிக்கோளாகும்.

இதனால் ஒவ்வொரு குடும்பமும் அதன் சமூக-பொருளாதார நிலை வேறுபாடின்றி , குழாய் நீர் விநியோகத்தைப் பெறுவது உறுதி செய்யப்படுகிறது. பல நூற்றாண்டுகளாக வீடுகளுக்கு தண்ணீர் கொண்டு வருவதற்கு தாய்மார்கள் மற்றும் சகோதரிகள் படும் சிரமத்தை களைந்து அவர்களின் சுதந்திரத்திற்காக ஜல் ஜீவன் இயக்கம் பாடுபடுகிறது. அவர்களின் உடல்நலம், கல்வி மற்றும் சமூக-பொருளாதாரத்தையும் மேம்படுத்துகிறது.

ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் மூலம் தேனி மாவட்டத்திலுள்ள அனைத்து ஊரக குடியிருப்புகளுக்கும் தனி நபர் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கிடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதையும் படிங்க : கொலை செய்யப்பட்ட கம்பம் வாலிபரின் உடல் 10 நாட்களுக்கு பின்னர் கண்டுபிடிப்பு..

இதன் ஒரு பகுதியாக 50 சதவீதத்துக்கும் மேல் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் வாழும் கிராமத்திலிருந்து திட்ட மதிப்பீட்டுத் தொகையில் 5 சதவீதம் மற்ற கிராமங்களிலிருந்து 10 சதவீதம் பொதுமக்கள் பங்களிப்புத் தொகையாக வசூல் செய்து பணிகளை செயல்படுத்திட அரசு மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதன் மூலம் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தினை மக்கள் இயக்கமாக மாற்றப்பட்டு வெற்றிகரமாக செயல்படு த்துவது அரசின் நோக்க மாகும். எனவே, ஊரகப் பகுதி களில் உள்ள பொதுமக்கள் தங்களது கிராமத்திற்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ள பொதுமக்கள் பங்களிப்புத் தொகையினை காலதாமதமின்றி ஊராட்சி நிர்வாகத்தி டம் செலுத்திட வேண்டும் என தேனி மாவட்ட கலெக்டர் முரளீதரன் தெரிவித்துள்ளார்.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Theni