உலக யோகா தினமானது 2015ம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் ஜூன் 21 ந் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பாரத பிரதமர் நரேந்திர மோடி 2014 ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றியதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச யோகா தினம் அனுசரிக்கப்படுகிறது. ஜூன் 21 ம் நாள் ஆண்டின் மிக நீண்ட பகல் பொழுதினை கொண்டதால் இந்த நாள் உலக யோகா நாளாக தேர்ந்தெடுக்கப்பட்டது.
சர்வதேச உலக யோகா தினத்தை முன்னிட்டு தேனி மாவட்டம் கம்பம் தனியார் பள்ளியில் பள்ளி ஆசிரியர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தாக்கத்தால், உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் சோர்வடைந்ததை போக்கவும், ஆசிரியர்கள் சுறுசுறுப்புடன் இருக்கவும் தேனி மாவட்டம் கம்பம் நகரில் உள்ள நாம்ஸ் தனியார் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஆசிரியைகளுக்கு யோகா பயிற்சியாளர் ராஜேந்திரன் யோகாசன பயிற்சயை அளித்தார்.

யோகா பயிற்சி பெறும் ஆசிரியர்கள்...
இன்று ஜூன் 21 - உலக யோகா தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில் இதனை சிறப்பிக்கும் விதமாக யோகா பற்றிய சொற்பொழிவும், யோகப் பயிற்சிகளையும் திருமூலர் பிராணயாம மூச்சுப் பயிற்சிகளையும் தினந்தோறும் செய்து வருவதால் ஏற்படும் உடல்நலம், மனநலம் பற்றியும் விரிவாக எடுத்துக் கூறினார் யோகா பயிற்சியாளர் ராஜேந்திரன். இந்த யோக பயிற்சியில் தனியார் பள்ளியில் பணியாற்றும் 30 ற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர்
மூச்சுப் பயிற்சி :-
இன்றைய நிகழ்ச்சியில் வக்ராசனம், திரிகோணாசனம், வீர பத்ர ஆசனம், பச்சி மோத்தாசனம், சேதுபந்த ஆசனம், ஏக பாத ஆசனம், உட்கட் ஆசனம், அர்த்த சக்கர ஆசனம், பத்மாசனம் போன்ற ஆசனங்கள் கற்றத்தரப்பட்டது. மேலும் பிராணயாமம், நாடி சுத்தி பிராணயாமம், பிரமரி பிராணயாமம், கபாலபதி பிராணயாமம், சிம்ம கிரியை, போன்ற மூச்சப் பயிற்சிகளும், முத்திரைகளான சின் முத்திரை, சின்மய முத்திரை, நாசிகா முத்திரை, இலிங்க முத்திரை, போன்றவைகளும் கற்றுத்தரப் பட்டன.

யோகா பயிற்சி பெறும் ஆசிரியர்கள்...
இதுகுறித்து யோகா பயிற்சியாளரான ராஜேந்திரன் கூறுகையில், " யோகா செய்வதினால் உடலும் உள்ளமும் ஆரோக்கியமாக இருக்கும். தினசரி யோகாசனம் செய்தால் மிகவும் உடலுக்கு நல்லதே. பணிக்கு செல்வது தினசரி 5-10 நிமிடம் சிறுசிறு யோகாசனங்கள் செய்தால் கூட உடலின் உள்ளுறுப்புகள் மிக நன்றாக இயங்கும். யோகாசனம் தினசரி செய்ய வேண்டும் யோகா தினத்தன்று மட்டும் யோகா செய்தால் போதாது தினசரி ஒவ்வொருவரும் குறைந்தது 5 நிமிடமாவது யோகாசனம் செய்வது அவசியம். மன உளைச்சலில் இருந்து வெளிவர யோகாசனம் மிகப் பயனுள்ளதாக அமையும்" என்றார்.
செய்தியாளர்: சுதர்ஸன்
உங்கள் நகரத்திலிருந்து(Theni)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.