தேனி மாவட்டம் லோயர் கேம்பில் கம்பம் பகுதியைச் சேர்ந்த தனியார் பள்ளி மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் மனவலிமை பெறவும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் உடலும் மனமும் ஒன்றினைந்து செயல்பட கம்பம் RR இன்டர்நேஷனல் பள்ளி சார்பாக லோயர் கேம்பில் உள்ள பென்னிகுவிக் மணி மண்டபத்தில் யோகாசன பயிற்சி அளிக்கப்பட்டது .
ஜூன் 21 - உலக யோகா தினமாக அனுசரிக்கப்படுவதால் உள்ளூர் மக்கள் அனைவரும் யோகா தினத்தை பற்றி விழிப்புணர்வு பெற பொதுமக்கள் அனைவருக்கும் பழக்கப்பட்ட இடமான லோயர்கேம்பில் அமைந்துள்ள பென்னிகுவிக் மணி மண்டபத்தில் யோகாசனம் செய்யப் பட்டதாக யோகா ஆசிரியர் மற்றும் உடற்கல்வி ஆசிரியரான மருது பாண்டியன் தெரிவித்தார் .
நிகழ்ச்சியில் சூரிய நமஸ்காரம் , வக்ராசனம், திரிகோணாசனம், வீர பத்ர ஆசனம், பச்சி மோத்தாசனம், சேதுபந்த ஆசனம், ஏக பாத ஆசனம், உட்கடாசனம், அர்த்த சக்கர ஆசனம்,பத்மாசனம் போன்ற ஆசனங்கள் கற்றத்தரப்பட்டது.
இந்த யோகப் பயிற்சியில் 60க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவியர் மற்றும் பத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டு யோகாசன பயிற்சி மேற்கொண்டனர்.
செய்தியாளர்: சுதர்ஸன்
உங்கள் நகரத்திலிருந்து(Theni)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.