முகப்பு /தேனி /

தேனியில் இனி தட்டுப்பாடின்றி குடிநீர்.. குட்நியூஸ் சொன்ன கம்பம் எம்.எல்.ஏ.!

தேனியில் இனி தட்டுப்பாடின்றி குடிநீர்.. குட்நியூஸ் சொன்ன கம்பம் எம்.எல்.ஏ.!

X
கம்பம்

கம்பம் எம்.எல்.ஏ.

Theni inspection | தேனி மாவட்டம் லோயர் கேம்ப் பகுதியில் அமைந்துள்ள குடிநீர் நீரேற்று நிலையத்தில் குடிநீர் விநியோகம் சீராக வழங்கப்படுகிறதா என கம்பம் எம்.எல்.ஏ. ஆய்வு மேற்கொண்டார்.

  • Last Updated :
  • Theni, India

கோடை காலம் நெருங்கி வரும் நிலையில் கம்பம், பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் குடிநீர் விநியோகம் சீராக வழங்குவதற்கு கம்பம் திமுக தெற்கு மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் கம்பம், கூடலூர் நகராட்சி ஆணையாளரிடமும், கோம்பை கேகேபட்டி தேவாரம் நாராயன்தேவன் பட்டி பேரூராட்சி தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தேனி லோயர் கேம்ப் பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் கம்பம் பள்ளத்தாக்கு கூட்டுக் குடிநீர் திட்டம் தலைமை நீரேற்று நிலையத்தில் கம்பம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மற்றும் திமுக தெற்கு மாவட்ட செயலாளரான ராமகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.

தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் நிலையில் கோடைகாலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உள்ளதால், நீரேற்று நிலையங்களில் இருந்து நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளுக்கு குடிநீர் சீராக விநியோகம் செய்ய வேண்டும் என்பதன் நோக்கத்திலும், பொதுமக்களுக்கு தங்கு தடை இன்றி குடிநீர் விநியோகம் சீராக இருக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் ஆய்வு மேற்கொண்டதாக கம்பம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

இதையும் படிங்க : 5 தலை நாகம் பாதுகாத்து வரும் 2,000 ஆண்டுகள் பழமையான போடி கீழச்சொக்கநாதர் கோயில் பற்றி தெரியுமா?

மேலும் குடிநீர் தொடர்பான பிரச்சனைகளை அனைத்து நகராட்சி பேரூராட்சி ஆணையாளர்கள் மற்றும் நகராட்சி பேரூராட்சி தலைவர்கள் உடனடியாக தீர்க்க வேண்டும் எனவும், நீரேற்று நிலையத்தில் தொடர்ந்து மின் வினியோகம் சீராக இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், நீறேற்று நிலத்தில் உள்ள அனைத்து மோட்டர்களும் தொடர்ந்து இயங்க வேண்டும் எனவும் கலந்தாலோசனை கூட்டத்தில் அறிவுறுத்தினார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    இந்த ஆலோசனை கூட்டத்தில் கம்பம் கூடலூர் நகராட்சி ஆணையாளர்கள், கோம்பை தேவாரம் பண்ணைப்புரம் பேரூராட்சி தலைவர்கள், திமுக நிர்வாகிகள் அரசு அதிகாரிகள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    First published:

    Tags: Local News, MLA, Theni