ஹோம் /தேனி /

தேனி மாவட்டத்தில் முதல் முறையாக நடைபெற்ற இந்திர விழா  

தேனி மாவட்டத்தில் முதல் முறையாக நடைபெற்ற இந்திர விழா  

X
தேனி

தேனி

Indran Festival : தேனி மாவட்டத்தில் முதன்முறையாக இந்திர விழா நடைபெற்றது. இதில் பல மாவட்ட மக்கள் கலந்துகொண்டனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டம், தேவேந்திர வேளாளர் உறவின் முறை மற்றும் தமிழ் பண்பாடு கலாச்சாரம் மற்றும் வரலாற்று ஆய்வு மையம் சார்பில் இந்திர விழா நடைபெற்றது. இந்திரனை சிறப்பிக்கும் வகையில் பழந்தமிழகத்தில் கொண்டாடப்பட்ட இந்திர விழா தேனி மாவட்டத்தில் முதல் முறையாக நடைபெற்றது. பசி, பிணி, பகை முதலியவற்றால் துன்பம் அடையாது இருத்தல் பொருட்டுத் தெய்வத்தைக் கருதிச் செய்யும் சாந்திப் பெருவிழாவே இந்திர விழாவாக கொண்டாடப்படுகிறது எனவும், விழாவைத் தீவகச் சாந்தி செய்தரு நன்னாள் என்று சாத்தனாரால் கூறப்படுகிறது என்றும், இவ்விழா புகார் என்ற நகரோடு அதிகம் தொடர்புற்றிருந்தாலும், ஆண்டுதோறும் மதுரையிலும் கொண்டாடப்படுகிறது.

இலக்கியங்களில் உவமை கூறும் அளவுக்கு விழா சிறப்பு பெற்றது என்று நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் கூறினர். இந்தாண்டு முதல் முறையாக தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகாவுக்கு உட்பட்ட அம்மச்சியாபுரத்தில் இந்திர விழா கொண்டாடப்பட்டது. பாண்டியர்களின் வைகை நதி சமவெளி பெருமைமிகு தேனி மாவட்ட அமைச்சியாபுரத்தில் தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்ட மக்கள் கலந்துகொண்டு படை சூழ வேந்தன் வழிபாடு என்றழைக்கப்படும் இந்திர விழா நடைபெற்றதாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

First published:

Tags: Local News, Theni