ஹோம் /தேனி /

தேனி மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு - அணைகளில் நீர் இருப்பு நிலவரம் இது தான்..

தேனி மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு - அணைகளில் நீர் இருப்பு நிலவரம் இது தான்..

தேனி  - அணைகளுக்கு நீர்வரத்து

தேனி - அணைகளுக்கு நீர்வரத்து

Theni Dam Levels | தேனி மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் குறித்த விவரம்... 

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் குறித்த விவரம்...

மழை பதிவு :-

தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை எதிரொலியாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. தேனி மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் நீர்நிலைகளில் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் அணைகளுக்கான நீர்மட்டம் படிப்படியாக உயர தொடங்கியுள்ளது . அதன்படி தேனி மாவட்டத்தில் பதிவாகியுள்ள மழையின் விவரம்

ஆண்டிபட்டியில் 33.4 மில்லி மீட்டர் மழையும்,

அரண்மனை புதூர் பகுதியில் 4.5 மில்லி மீட்டர் மழையும்,

போடி நாயக்கனூர் பகுதியில் 4.8 மில்லி மீட்டர் மழையும்,

கூடலூரில் 17.6 மில்லி மீட்டர் மழையும்,

மேலும் படிக்க:  சனீஸ்வர பகவானால் அருள்பாலிக்கும் குச்சனூர் கோவில் - இங்கு வருவோருக்கு ஏற்படும் நன்மைகள்!

பெரியகுளத்தில் 9.0 மில்லிமீட்டர் மழை அளவும்,

உத்தமபாளையம் பகுதியில் 9.4 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகியுள்ளது.

மஞ்சளாறு அணை பகுதியில் 8.6 மில்லி மீட்டர் மழையும், பெரியாறு அணை பகுதியில் 4.0 மில்லிமீட்டர் மழை அளவும், சோத்துப்பாறையில் 12.0 மில்லிமீட்டர் மழை அளவும், வைகை அணை பகுதியில் 48.0மில்லிமீட்டர் மழை அளவும், தேக்கடி பகுதியில் 6.2 மில்லிமீட்டர் மழை அளவும் பதிவாகி உள்ளது.

நீர்மட்டம் :-

தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணை, சண்முகநதி அணை, மஞ்சளாறு அணை, சோத்துப்பாறை அணை மற்றும் முல்லைப் பெரியாறு அணையின் இன்றைய நீர்மட்டம் விவரங்கள் ...

71 அடி கொள்ளளவு கொண்ட வைகை அணையில் தற்போதைய நீர்மட்டம் 70.69 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 2027 கனஅடியாக உள்ளது. 1319 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மஞ்சளாறு அணையில் தற்போதைய நீர்மட்டம் 55.00 அடியாக உள்ளது. அணையின் முழு கொள்ளளவு 57 அடியாகும். நீர்வரத்து 408 கன அடியாக உள்ளது . நீர் வெளியேற்றம் 40 கண்ணாடியாக உள்ளது

126.28 அடி உயரம் கொண்ட சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.60 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 135 கன அடி . 30 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

52.55 அடி உயரம் கொண்ட சண்முக நதி அணையின் நீர்மட்டம் 52.50 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 16 கனஅடி . தண்ணீர் வெளியேற்றம் இல்லை.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 134.05 அடியாக உள்ளது. அனைத்து நீர்வரத்து 1739 கன அடி. 511 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Published by:Arun
First published:

Tags: Local News, Theni, Vaigai dam level