முகப்பு /தேனி /

தேனி தப்புகுண்டு கிராமத்தில் 253 ஏக்கர் பரப்பளவில் புதிய கால்நடை மருத்துவமனை திறப்பு..

தேனி தப்புகுண்டு கிராமத்தில் 253 ஏக்கர் பரப்பளவில் புதிய கால்நடை மருத்துவமனை திறப்பு..

X
தேனி

தேனி தப்புகுண்டு கிராமத்தில் கால்நடை மருத்துவமனை திறப்பு 

Theni District News | தேனி மாவட்டம் தப்புகுண்டு கிராமத்தில் 253 ஏக்கர் பரப்பளவில் கட்டி முடிக்கப்பட்ட கால்நடை மருத்துவமனை திறந்துவைக்கப்பட்டது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டம் தப்புகுண்டு கிராமத்தில் கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் 30ம் தேதி கால்நடை மருத்துவமனை கட்டும் பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தது. தற்போது பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலம் கால்நடை மருத்துவமனை கட்டடங்களை திறந்து வைத்தார்.

இதனைத்தொடர்ந்து, தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா குத்துவிளக்கு ஏற்றி கால்நடை மருத்துவமனையை தொடங்கி வைத்தார். இதில் கால்நடை கல்லூரி, ஆராய்ச்சி நிலைய கட்டிடம், நிர்வாக கட்டிடம், கால்நடை மருத்துவமனை கல்வி பிரிவு கட்டிடம், கால்நடை பண்ணை வளாகம், கால்நடை உற்பத்தி தொழில்நுட்பக்கூடம், பரிசோதனை நிலையம், சிற்றுண்டியகம், மற்றும் மாணவ, மாணவியர் விடுதி ஆகிய 19 கட்டிடங்கள் உள்ளன.

இதையும் படிங்க : இளம்பெண்ணுக்கு கடன் வழங்கி பாலியல் துன்புறுத்தல்... அந்தர படங்களை வைத்து மிரட்டல்... விஏஓ கைது..!

இந்த கட்டிடங்கள் 3,41,770 சதுர அடியில் கட்டப்பட்டுள்ளன. இந்த விழாவில் தேனி ஒன்றிய குழு தலைவர் சக்கரவர்த்தி, கல்லூரி முதல்வர் ரிச்சர்ட் ஜெகதீசன் ஆகியோரும் குத்துவிளக்கு ஏற்றி வைத்து மாணவர்கள் ஆசிரியர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

First published:

Tags: Local News, Tamil News, Theni