Home /theni /

தோட்டக்கலை துறையை நாடி அதிக லாபம் ஈட்டுவது எப்படி? 

தோட்டக்கலை துறையை நாடி அதிக லாபம் ஈட்டுவது எப்படி? 

மாதிரி படம்

மாதிரி படம்

விவசாயத்துக்கு தேவையான ஊடு பயிர்களை சாகுபடி செய்ய  விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கப்படுகிறது. அவைகளை பெற்று அதிக லாபத்தில் பயன் பெற  தோட்டக்கலைத்துறைகளை நேரடியாக அணுகி பயன் பெறலாம் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Theni, India
விவசாயத்துக்கு தேவையான ஊடு பயிர்களை சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது. அவைகளை பெற்று அதிக லாபத்தில் பயன் பெற தோட்டக்கலைத்துறைகளை நேரடியாக அணுகி பயன் பெறலாம் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் கம்பம் வட்டார தோட்டக்கலை மலைப்பயிர்கள் துறை மற்றும் ஹெச்.டி.எப்.சி வங்கி இணைந்து விவசாயம் சார்ந்த உள்கட்டமைப்புக்கான நிதி குறித்து விவசாயிகளுக்கான விளக்க கூட்டம் கம்பம் தோட்டக்கலை அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

தோட்டக்கலை அலுவலர் பழனிவேல்ராஜன் தொடங்கி வைத்து பேசினார். விவசாய உள்கட்டமை ப்புக்கு தேவைப்படும் கடனுதவி மற்றும் மானிய விபரங்களும், குறிப்பாக ரூ.17.5 லட்சம் 35 சதவீத மானியத்தில் ஒருங்கிணைந்த சிப்பம் கட்டும் அறை, விவசாயிகளுக்கு தேவையான எந்திரங்கள் கொள்முதல், அறுவடை பின்செய் நேர்த்தி கட்ட மைப்புகளுக்கான கடனுதவி மற்றும் மானிய விபரங்கள் தொடர்பாக விளக்கங்களை தோட்டக்கலை துறை சார்பாகவும் வங்கி அலுவலர்கள் சார்பாகவும் விளக்கி கூறப்பட்டது.

Also Read : வெற்றிலை விவசாயத்தில் கலக்கும் சின்னமனூர்: வெளிமாநில ஏற்றுமதி எப்படி நடக்கிறது?

அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் திட்டங்கள் சார்ந்த தொழில்நுட்பங்களும், தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின் கீழ் தக்காளி, மிளகாய், மா, கொய்யா, எலுமிச்சை, பப்பாளி, தென்னைக்கு ஊடுபயிராக கொக்கோ, அத்தி கன்றுகள் மானியத்தி லும், தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தில் கொட்டைமுந்திரி மற்றும் முருங்கை கன்றுகள் மானியத்திலும், மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தில் காய்கறி விதைகள் மானியத்தில் வழங்குவது குறித்து விவசாயிகளுக்கு தோட்டக்கலை உதவி இயக்குநர் பாண்டியராணா விளக்கி கூறினார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இக்கூட்டத்தில் ஹெச்.டி.எப்.சி வங்கி மண்டல விவசாய முதன்மை அலுவலர் ஷியாம் சுந்தர ரெட்டி, வங்கி மேலாளர்கள் தினேஷ், பாலமுரளி மற்றும் கம்பம் சுற்றுவட்டாரப்பகுதி விவசாயிகள் பங்கேற்றனர். கூட்டத்திற்கான ஏற்பாடு களை உதவி தோட்டக்கலை அலுவலர்கள் விவேகா னந்தன், சுதாகர் செய்தி ருந்தனர்.

மேலும், இந்த கூட்டத்தில், விவசாயத்துக்கு தேவையான ஊடு பயிர்களை சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கப்படுகிறது. அவைகளை பெற்று அதிக லாபத்தில் பயன் பெற தோட்டக்கலைத்துறைகளை நேரடியாக அணுகி பயன் பெறலாம். இந்த ஒருங்கிணைந்து வோளாண் வளர்ச்சி திட்டத்தில் விவசாயிகள் பயன் பெற முடியும் என்று கூறப்பட்டுள்ளது.
Published by:Vijay R
First published:

Tags: Local News, Theni

அடுத்த செய்தி