Home /theni /

மாற்றுத் திறனாளிகள் வேலையின்மைக்கான உதவித் தொகை பெறுவது எப்படி?

மாற்றுத் திறனாளிகள் வேலையின்மைக்கான உதவித் தொகை பெறுவது எப்படி?

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

வேலை வாய்ப்பில்லாமல் தவிக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு மாநில அரசு சார்பில் உதவித் தொகை வழங்கப்படுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    தேனி மாவட்டத்தில், வேலை இல்லாத மாற்றுத்திறானாளிகள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டிற்கு மேல் காத்திருக்கின்றனர். அவர்கள் எவ்வாறு அரசு வழங்கும் உதவித் தொகையை எவ்வாறு பெறலாம் என்று பார்க்கலாம்.

    வேலை இல்லாத மாற்றுத்திறானாளிகள் கட்டாயம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து இருக்க வேண்டும். மேலும், பதிவு செய்து ஓராண்டு கடந்திருக்க வேண்டும். அவர்களுக்கு அரசு சார்பில் உதவித் தொகை மாதந்தோறும் வழங்கப்படுகிறது.

    உதவித்தொகை பெற விரும்பும் மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான உச்ச வரம்பு கிடையாது. பொறியியல், மருத்துவம், விவசாயம், கால்நடை மருத்துவம், சட்டம் போன்ற தொழிற்கல்வி பட்டதாரிகள் உதவித் தொகை பெற தகுதியில்லை. அரசின் வேறு உதவித் தொகை ஏதும் பெற்றிருத்தல் கூடாது. அன்றாடம் கல்வி நிறுவனங்களுக்குச் சென்று பயிலும் மாணவர்களுக்கு உதவித் தொகை கிடையாது.

    இத்தகுதிகள் பெற்று மாவட்ட வேலை வாய்ப்பு மையத்தில் பதிவு செய்துள்ள மாற்றுத் திறனாளிகள் http://tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரைத் தொடர்பு கொண்டு பயன் பெறலாம் என ஆட்சியர் முரளீதரன் தெரிவித்துள்ளார்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Theni

    அடுத்த செய்தி