ஹோம் /தேனி /

தேனியில் மாற்றுத்திறனாளிகள் இலவச தையல் எந்திரம் பெறுவது எப்படி? முழு விவரம் இதோ

தேனியில் மாற்றுத்திறனாளிகள் இலவச தையல் எந்திரம் பெறுவது எப்படி? முழு விவரம் இதோ

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

தேனி மாவட்டத்தில் இலவச மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின்கீழ் பயனாளிகளை தேர்வு செய்வது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் காது கேளாத மற்றும் வாய்பேச இயலாத மற்றும் இதர மாற்றுத்திறனாளிளுக்கு இலவச மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின்கீழ் பயனாளிகளை தேர்வு செய்திட 04.08.2022 அன்று நேர்முகத் தேர்வில் கலந்துகொண்டு பயனடைய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மாற்றுத்திறனாளிகள்:

தேனி மாவட்டத்தில் 18 வயது முதல் 60 வயது வரையுள்ள காது கேளாத மற்றும் வாய்பேச இயலாத மாற்றுத்திறனாளிகள், கால் பாதிக்கப்பட்டோர், 40% மிதமான மனவளர்ச்சி குன்றியோர், 75%ற்கு மேல் பாதிப்புள்ள கடுமையான மனவளர்ச்சி குன்றியோரின் தாய்மார்கள் ஆகியோருக்கு இலவச மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் வழங்கும் திட்டம் உள்ளது. அந்த திட்டத்தின் கீழ் பயனாளிகளை தேர்வு செய்திட 04.08.2022 அன்று காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேர்முகத் தேர்வு நடைபெறவுள்ளது.

தேவையான ஆவணங்கள்:

மேற்காணும் திட்டத்தில் பயனடைய புதிதாக விண்ணப்பிப்பவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை அசல் மற்றும் நகல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல் (மனவளர்ச்சி குன்றியோர் திட்டத்தில் மாற்றுத்திறனாளியின் தாயின் ஆதார் மற்றும் புகைப்படம்), தையல் பயிற்சி பெற்ற சான்று அசல் மற்றும் நகல், புகைப்படம் 2 ஆகியவற்றுடன் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், S.P ஆபிஸ் பின்புறம் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ 27.07.2022க்குள் விண்ணப்பிக்கலாம். இந்த தேர்வின்போது தையல் தைப்பதற்கு 1/2 மீட்டர் அளவில் உள்ள காடா துணி, கத்தரிகோல், பாபின், நூல்கண்டுடன் வருகை தரவேண்டும்.

இத்தேர்விற்கு ஏற்கனவே சமூக நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அல்லது பிற துறைகள் மூலமாக தையல் இயந்திரம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியில்லை. எனவே தகுதியான மாற்றுத்திறனாளிகள் நேர்முகத்தேர்வில் கலந்து கொண்டு பயனடையலாம்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Published by:Karthick S
First published:

Tags: Local News, Theni