ஹோம் /தேனி /

Theni News : தேனி அல்லிநகரத்தில் பாரத மாதாவிற்கு தேர்பவணி - ஏராளமான மக்கள் பங்கேற்பு

Theni News : தேனி அல்லிநகரத்தில் பாரத மாதாவிற்கு தேர்பவணி - ஏராளமான மக்கள் பங்கேற்பு

X
தேனி

தேனி

Theni News : தேனி மாவட்டம் பொம்மையகவுண்டன்பட்டி சாலையில் உள்ள பிள்ளையார் கோயிலில் இந்து எழுச்சி முன்னணி சார்பில் 7ம் ஆண்டு பாரதமாதா தேர் பவனி நிகழ்ச்சி மேளதாளங்களுடன் நடந்தது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Theni Allinagaram | Theni

தேனி மாவட்டம் தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட பிள்ளையார் கோயிலில் வேதபுரி ஸ்ரீ ஓங்கார நந்தமக ஸ்வாமிகளின் சிஷ்சியர் சுவாமி ஸம்விதா நந்தா தலைமையில் பாரதமாதா தேர் பவனிநிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை ஒட்டி பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பாரத மாதா தேர் பவனி, தேனி அல்லிநகரம் பெரியகுளம் செல்லும் சாலையில் ஊர்வலமாக சென்றது. இந்நிகழ்ச்சியை ஒட்டி தேவராட்டம், ட்ரம் செட் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும் பாரதமாதா தேர்பவனி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான நபர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க போலீசார் பாதுகாப்புடன் தேர் பவனி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி மாவட்டச் செயலாளர் ராமமூர்த்தி தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.

மேலும் படிக்க : "அம்மாவாக உணர்கிறேன்" ஜல்லிக்கட்டு காளைகளால் தாய் ஆனேன்.. திருநங்கை கீர்த்தனா!

இந்த பாரத மாதா தேர் பவனி நாட்டில் உள்ள அனைவரும் சாதி, மத பேதமின்றி ஒற்றுமையாக வாழ வழி வகுப்பதற்காகவும், ஒரே குடும்பமாக வாழவேண்டும் என்ற எண்ணம் தோன்றுவதற்காகவும், இந்துக்களின் ஒற்றுமை திருவிழாவாகவும் தேர்பவனி நிகழ்ச்சி நடத்தப்படுகிறது என்று நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த தேர் பவனி நிகழ்ச்சியில் இந்து எழுச்சி முன்னணி மாவட்ட நகர ஒன்றிய அளவிலான நிர்வாகிகள், மகளிர் அணியினர், இந்து முன்னணி நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.இந்நிகழ்ச்சியின் முடிவில் விழாவிற்கு வந்த அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது.

First published:

Tags: Local News, Theni