முகப்பு /தேனி /

தேனி | வீரபாண்டி கௌமாரியம்மன் கோவிலில் கழிப்பிட வசதி வேண்டும்- ஆட்சியரிடம் இந்து முன்னணி மனு

தேனி | வீரபாண்டி கௌமாரியம்மன் கோவிலில் கழிப்பிட வசதி வேண்டும்- ஆட்சியரிடம் இந்து முன்னணி மனு

X
இந்து

இந்து முன்னணி அமைப்பு

Theni | தேனி மாவட்ட ஆட்சியரிடம் இந்து முன்னணி அமைப்பு சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Theni, India

இந்து முன்னணி அமைப்பு சார்பில் வீரபாண்டியில் கழிப்பிட வசதி மற்றும் குளிக்கும் இடங்களை சுத்தம் செய்து தர வேண்டிதேனி ஆட்சியர் ஷஜீவனாவிடம்மனு அளித்தனர்.

கழிப்பிட வசதி வேண்டி மனு

தேனி அருகே சிவலிங்க நாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் சின்னராஜ். இவர் இந்து முன்னணி தேனி ஒன்றிய செயலாளராக உள்ளார்.இவர் தலைமையிலான இந்து முன்னணியினர் தேனி ஆட்சியர் அலுவலகம் வந்து வீரபாண்டி கௌமாரியம்மன் கோயிலில் கழிப்பிட வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்ற கோரிக்கை மனு ஒன்றனை அளித்தனர்

இதுகுறித்து இந்து முன்னணி ஒன்றிய செயலாளரான சின்னராஜ் கூறுகையில், ’வீரபாண்டி கௌமாரியம்மன் திருக்கோவிலுக்கு சுவாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு முறையான கழிப்பிட வசதி இல்லாததால் ஆற்றின் கரையோரத்திலும், பக்தர்கள் குளிக்கும் இடத்திலும் இயற்கை உபாதைகளைகழித்து வருவதால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் சிரமம் அடைவதாகவும், பக்தர்கள் நீராடும் படித்துறையும் சுத்தமில்லாமல் குப்பையாக உள்ளதால் சுவாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடன்களை செலுத்த முடியாத முடியாமல் தவிக்கின்றனர் என தெரிவித்தனர்.

மேலும் திருக்கோவில் முன்பு இலவச கழிப்பறை கட்டப்பட்டு அது திறக்கப்படாமல் மூடியே உள்ளதால் பொதுமக்கள் சிரமம் அடைவதாக தெரிவித்தனர்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை முயற்சி.. தேனியில் பயங்கரம்!

மேலும் ஸ்ரீ கண்ணீசுவரன் உடையார் கோவிலில் விநாயகர் சன்னதியின் மேல் கூரையில் பல ஆண்டுகளாக கும்பம் இல்லாத நிலையிலே உள்ளது. அதனையும் சீர்படுத்தி தர வேண்டும் என்ற கோரிக்கையை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் அளித்துள்ளதாக தெரிவித்தனர்.

First published:

Tags: Local News, Theni