Home /theni /

புதிய பால கட்டுமானப் பணி: மதுரை- தேனி 4 வழி சாலையை 2 வழி சாலையாக பயன்படுத்த அறிவுறுத்தல்

புதிய பால கட்டுமானப் பணி: மதுரை- தேனி 4 வழி சாலையை 2 வழி சாலையாக பயன்படுத்த அறிவுறுத்தல்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

மதுரையிலிருந்து தேனிக்கு வரும் வாகனங்கள் தேனி புறவழிச்சாலை பிரிவு முதல் மேரி மாதா பள்ளி வரை நான்கு வழிச்சாலையை இருவழி சாலையாக பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மதுரையிலிருந்து தேனிக்கு வரும் வாகனங்கள் தேனி புறவழிச்சாலை பிரிவு முதல் மேரி மாதா பள்ளி வரை வலது பகுதியினை ஏற்கனவே உள்ள நான்கு வழிச்சாலையை இருவழி சாலையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நெஞ்சாலை துறையினர் தெரிவித்துள்ளனர்.

    மதுரை முதல் கொச்சி வரை நான்கு வழி பாதைப் பணிகள் நடந்து வருகின்றது. மேலும், ஆங்காங்கே தேனி மாவட்டத்தில் புதிய மேம்பாலங்களும் அமைக்கும் பணிகளும் நடந்து வருகின்றது. இதற்காக, தேனி வட்டம் மதுரை-கொச்சி சாலையில் மதுரை சாலையில் மேரி மாதா பள்ளி முதல் திட்டச்சாலை பிரிவு வரை ரயில்வே கடவு எண் 68ன் குறுக்கே தேசியநெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைக்கப்பட இருக்கிறது. இதற்கு புதுடெல்லியில் உள்ள மத்திய தரைவழிப் போக்குவரத்து அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

    இதையொட்டி, முதற்கட்டமாக மேரி மாதா பள்ளி முதல் தேனி புறவழிச் சாலைப்பிரிவு வரை சாலையின் இடதுபுறத்தில் மேம்பாலம் கட்டும் பணி நடைபெற உள்ளது. ஆகையால் தேனியிலிருந்து மதுரை நோக்கி செல்லும் வாகனங்கள் மற்றும் மதுரையிலிருந்து தேனிக்கு வரும் வாகனங்கள் தேனி புறவழிச்சாலை பிரிவு முதல் மேரி மாதா பள்ளி வரை வலது பகுதியினை ஏற்கனவே உள்ள நான்கு வழிச்சாலையை இருவழி சாலையாக இருவழிப் பாதையாக பயன்படுத்தி வாகனங்களை இயக்க அறிவுறுத்தப்படுகிறது.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Theni

    அடுத்த செய்தி