உலகிலேயே அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் ஹீமோபிலியா நோய் குறைபாட்டால் பாதிக்கப்படுபவர் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. சாதாரணமாக உடலில் காயம் ஏதும் ஏற்பட்டால் ரத்தக்கசிவு ஏற்படும். ரத்தத்தில் உள்ள உறையும் தன்மை காரணமாக ரத்தம் வெளியேறுவது சிறிது நேரத்தில் இயல்பாகவே நின்று விடும். நமது உடலில் ரத்தம் உறைவதற்கு என 13 வகையான ரத்த உறைப் பொருட்கள் உள்ளன.
ஆனால், ரத்த உறை பொருளின் குறைபாட்டால் சிறு கீறல் மூலம் ஏற்பட்ட ரத்தக் கசிவுகூட சிலருக்கு எளிதில் நிற்காது. ரத்த உறை பொருள் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களே ஹீமோபிலியா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என கூறுகின்றனர். மரபுவழி ரத்தப்போக்கு கோளாறான ஹீமோபீலியா நோய் அறிதான நோய் என்றாலும், நோயின் தாக்கம் அதிகரிக்கும்போது ரத்தக்கசிவு ஏற்பட்டும் உயிரிழக்கும் நிலைக்கூட ஏற்படும்.
இதனால் ஹீமோபிலியா நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 17ம் தேதி ஹீமோபிலியா தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் ஹீமோபிலியா நோய் பற்றி தெரிந்திருக்க வேண்டிய அடிப்படை கூறுகள் மற்றும் நோயினால் யார் அதிகமாக பாதிக்கப்படுவார்கள்? நோய் அறிகுறி என்ன? நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மேற்கொள்ளப்படும் மருத்துவ முறை என்ன என்பது பற்றி தேனி மாவட்டத்தைச் சேர்ந்த புற்றுநோய் சிறப்பு மருத்துவரான பாரதி கூறுவதை இந்த தொகுப்பில் காணலாம்.
இதையும் படிங்க : புதுவையில் அடுத்த 2 மாதங்களில் மீன்களின் விலை உச்சத்தை தொடும்..
ஹீமோபிலியா :-
ஹீமோபிலியா நோய் என்பது அரிதான நோய் தான் . இது ஒரு மரபுவழி நோய். இந்த நோயினால் பெண்களை விட அதிகம் பாதிப்பது ஆண்கள் தான். X குரோமோசோம்களில் உள்ள மரபணு மாற்றத்தால் ஹீமோபிலியா நோய் ஏற்படுகிறது. இந்த நோய் புற்றுநோய் பாதிப்பு உள்ளவர்களுக்கும், எதிர்ப்பாற்றல் குறைவாக உள்ள நபர்களுக்கும் , கர்ப்பகாலத்தில் ஏற்படும் உறைபொருள் குறைபாடு உள்ள நபர்களுக்கும் ஹீமோபிலியா நோய் தாக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது .
பாதிப்புகள் :-
ஹீமோபிலியா நோயில் ஒரு சில வகைகள் இருந்தாலும் ஹீமோபிலியா ஏ எனப்படும் வகையிலான நோய் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. உறைதல் காரணி IX-ன் குறைபாட்டால் ஏற்படும் ஹீமோபிலியா B, C நோய் அரிதானவையாக பார்க்கப்படுகிறது . B, C வகையிலான ஹீமோபிலியா நோயினால் மிகவும் குறைவான நபர்கள் மட்டுமே பாதிக்கப்பட வாய்ப்புள்ளது . ஹீமோபிலியாA வகையிலான நோயில் பாதிப்புகள் அதிகமாகவே இருக்கும் . சிறிய காயம் ஏற்பட்டாலும் கூட அதிக அளவில் உள்ள ரத்தப்போக்கு இருக்கும் , சில நேரங்களில் காயம் ஏற்படாமல் இருந்தபோதிலும் கூட ரத்தப்போக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
அறிகுறிகள் :-
இந்த வகையிலான நோய் பாதிப்பு ஏற்படுவது ஒரு சில அறிகுறிகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
சிறிய அளவிலான காயம் ஏற்பட்டாலும் பெரிய அளவில் ரத்தக் கசிவு இருப்பது , காயம் ஏற்படாமலேயே தோலுக்கு அடியில் ரத்தக் கசிவு ஏற்பட்டு நிறம் மாற்றத்துடன் காணப்படுவது , உடலின் உட்பகுதியில் ரத்த கசிவு ஏற்படுவது, சிறுநீர் மற்றும் மலர் மூலம் ரத்தம் வெளியேறுவது, மூட்டுகளிலும் தசை களிலும் ரத்தக்கசிவு, மூட்டுகளில் ரத்தம் தேங்குவதால் ஏற்படும் வலி, மூளையின் உட்பகுதியில் ஏற்படும் ரத்தக்கசிவு, தலைவலி, வாந்தி, பார்வை பிரச்சினைகள், வலிப்பு, பக்கவாதம், நடவடிக்கைகளில் மாற்றம் போன்ற தொந்தரவுகள் ஏற்பட்டு, நோயாளி மயக்கநிலையை அடைவது போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இந்த நோய் மரபு வழி நோய் என்பதால் நெருங்கிய உறவில் திருமணம் செய்வதைத் தவிர்பது மூலமும், குடும்பத்தில் யாருக்காவது இந்தப் பாதிப்பு இருப்பது தெரிந்தால், தம்பதி ரத்தப் பரிசோதனையை அவசியம் செய்து கொள்வதும் அடிப்படை.
சிகிச்சை முறை :-
இந்த நோய் மரபுகளை நோய் என்பதால் இந்த நோய் தாக்கிய நபர்கள் உடனடியாக தங்கள் குடும்ப நபர்களுக்கு தெரிவிக்க வேண்டும் . இது குறித்து மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும். ஹீமோபிலியா நோய் தாக்கம் ஏற்பட்ட நபர்களுக்கு மருத்துவர்களால் மருத்துவ சிகிச்சை மிகவும் கவனிக்கப்பட்டு மிகவும் உன்னிப்பாக சிகிச்சை அளிக்கப்படும்.
ஆய்வக பரிசோதனை செய்யும்போது நோயாளிக்குப் பொதுவான உடல் பரிசோதனைகளுடன், ரத்த அணுக்களின் எண்ணிக்கை கணக்கிடப்படும், ரத்த அணு அமைப்பு, ரத்தக் கசிவு நேரம், ரத்த உறை நேரம், புரோதிராம்பின் நேரம், பார்ஷியல் திராம் போபிளாஸ்டின் நேரம் (APTT நேரம்) ஆகியவை சோதனை செய்யப்படும்.
அதே போல ரத்த உறைபொருளின் அளவு எவ்வளவு குறைந்துள்ளது என்பது கணக்கிடப்பட்டு அதற்கேற்றவாறு சிகிச்சை அளிக்கப்படும். அடிக்கடி ரத்த இழப்பு ஏற்பட்டால், ரத்தம் செலுத்த வேண்டியது வரும். ஒரு சிலருக்குப் புதிய பதப்படுத்தப்பட்ட பிளாஸ்மாவைச் செலுத்த வேண்டிய சூழலும் ஏற்படும். ரத்தக் கசிவைத் தடுக்கும் சில மருந்துகளும் இவர்களுக்குப் பயன்படும்.
இந்த நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குப் ஊசிகள் தோலுக்கு அடியில் தான் போடப்படும். இதன் மூலம் ரத்த கசிவு ஏற்படுவது தடுக்கப்படும். பல் எடுக்கும்போதும் அறுவை சிகிச்சையின்போதும் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் மருத்துவர்கள் சிகிச்சை மேற்கொள்வர். வலி குறைப்பான் மருந்துகளை இவர்களுக்குக் கொடுக்கப்பட மாட்டது
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Health, Lifestyle, Local News, Theni