ஹோம் /தேனி /

தேனி மாவட்டத்தில் வெளுத்து வாங்கிய கனமழை - பகுதிவாரியாக மழையின் அளவு குறித்த விபரம் இதோ

தேனி மாவட்டத்தில் வெளுத்து வாங்கிய கனமழை - பகுதிவாரியாக மழையின் அளவு குறித்த விபரம் இதோ

தேனி மாவட்டத்தில் வெளுத்து வாங்கிய கனமழை

தேனி மாவட்டத்தில் வெளுத்து வாங்கிய கனமழை

Theni Rains | வடகிழக்கு பருவமழை காரணமாக தேனி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த நிலையில், மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் பெய்த மழையின் அளவு குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Theni, India

தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. வங்க கடலில் உருவான வடகிழக்கு பருவமழை காற்றழுத்த தாழ்வு நிலை பகுதி காரணமாக தமிழகத்தில் 16 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில், வங்க கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தென் தமிழகத்தில் பலத்த மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் அறிவித்த படி தேனி மாவட்டத்தில் நேற்று பிற்பகல் முதல் இரவு வரை விடிய விடிய பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது . மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் சுமார் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக பல்வேறு பகுதிகளில் தொடர் மழை பெய்தது.

நேற்று காலை முதல் தேனி உள்பட மாவட்டத்தின் பல இடங்களிலும் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் தேனி, ஆண்டிப்பட்டி, போடி, சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம், கூடலூர் மற்றும் பல பகுதிகளில் கன மழை சுமார் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக பெய்தது.

மேலும் படிக்க:  தேனி மாவட்டத்தை சேர்ந்த பிரபல சினிமா இயக்குனர்கள் யாரெல்லாம் தெரியுமா?

தேனியில் மாலை 3 மணி அளவில் பெய்ய தொடங்கிய கனமழை இரவு 8 மணி வரை நீடித்தது. போடி, உத்தமபாளையம், கம்பம், சின்னமனூர் உள்ளிட்ட இடங்களில் மாலை 3 மணியளவில் பலத்த மழை பெய்யத் தொடங்கி இரவு வரை நீடித்தது.

தொடர்ந்து பல மணி நேரம் பெய்த மழைக் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளின் சாலைகளில் மழை நீர் ஆறாக ஓடியது. இடைவிடாமல் பெய்த கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வீடுகளில் முடங்கினர். இந்த நிலையில் தேனி மாவட்டம் முழுக்க பல்வேறு பகுதிகளில் பெய்த மழையின் அளவு குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது.

பதிவாகியுள்ள மழை அளவு : 

அதன்படி, ஆண்டிபட்டி பகுதியில் 24.0 மில்லிமீட்டர் மழை அளவும்,

தேனி சுற்றுவட்டாரப் பகுதிகளில் (அரண்மனை புதூர் )127.0 மில்லிமீட்டர் மழை அளவும்,

போடி நாயக்கனூர் பகுதியில் 25.6 மில்லிமீட்டர் மழை அளவும்,

மஞ்சளாறு பகுதியில் 63.0 மில்லிமீட்டர் மழை அளவும்,

பெரியகுளம் பகுதியில் 91.0 மில்லிமீட்டர் மழை அளவும்,

சோத்துப்பாறை அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் 25.0 மில்லிமீட்டர் மழை அளவும்,

மேலும் படிக்க:  திருச்சி பொன்மலையில் உருவாக்கப்பட்ட ஊட்டி மலைப்பாதை ரயில் என்ஜின் - சிறப்புகள் என்ன?

கூடலூர் பகுதியில் 28.4 மில்லிமீட்டர் மழை அளவும்,

உத்தமபாளையம் பகுதியில் 13.4 மில்லிமீட்டர் மழை அளவும்,

வீரபாண்டி பகுதியில் 64.2 மில்லிமீட்டர் மழை அளவும் பதிவாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து தேக்கடியில் 30.2 மில்லிமீட்டர் மழை அளவும், பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் 38.0 மில்லிமீட்டர் மழை அளவும் பதிவாகியுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இன்று காலை முதலே பல்வேறு இடங்களில் சாரல் மழை தொடங்கியது. மேலும் பல பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. மாவட்டத்தில் இன்றும் கனமழை பெய்ய கூடும் என எதிர்பார்க்கப்படுவதால் , மக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும் என காவல் துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்

Published by:Arun
First published:

Tags: Heavy Rains, Local News, Theni